டெல்லியை சேர்ந்தவர் அகன்ஷா. இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடல் எடையை குறைக்க பெங்களூரு எம்.எஸ்.பாளையாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகன்ஷா, கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிகிறது.
ஆனால் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அகன்ஷா வயிற்றில் புண் வந்து உள்ளது. மேலும் கடுமையான உடல் வலியாலும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து தனக்கு கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த டாக்டரை தொடர்பு கொண்டு அகன்ஷா பேசி உள்ளார். அப்போது டாக்டர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
உடல் வலியால் மிகுந்த அவதிக்குள்ளான அகன்ஷா வேறொரு மருத்துவரை தொடர்பு கொண்டு இந்நிலை குறித்து தெரிவித்தார். அப்போது அம்மருத்துவர் அறுவை சிகிச்சை சரியாக செய்யவில்லை எனவும், அதை சரிசெய்ய மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.
பெங்களூருவில் கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் ஐடி ஊழியருக்கு தீவிர பக்க விளைவு#Bangalore | #ITEmployee | #Fatreductionsurgery | #SideEffects | #ViralVideo pic.twitter.com/oyDvvjnnqu
— Rohith (@RohithMt15) June 1, 2022
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அகன்ஷா கண்ணீர்மல்க ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனக்கு வயிற்றில் புண் ஏற்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், கடுமையாக அவதிப்படுவதாகவும், தனக்கு அறுவை சிகிச்சை அளித்த டாக்டர் கார்த்திக் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அம் மருத்துவரை சும்மா விட்டுவிட போரதில்லை என்றும், அவர் செய்த மோசடி பற்றி அனைவருக்கும் கூறப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் மருத்துவமனையில் இருந்து செல்போனில் அழைப்பு வந்ததாகவும், அப்போது இன்னொரு பெண்ணும் கொழுப்பு அறுவை செய்ய வந்து இருப்பதாகவும், அவரிடம் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பக்க விளைவு ஏற்படாது என்று கூறும்படியும் தன்னிடம் கேட்டதாக தெரிவித்தார்.
மேலும் மருத்துவமனையில் கேட்டுக்கொண்டது போலவே இவரும் கூறியதாக தெரிவித்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இவரது இந்த வீடியோ பதிவு வைரலாகி உள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள் அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொழுப்பு அறுவை சிகிச்சையின் போது கன்னட இளம் நடிகை சேத்தனா ராஜ் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Ration Card: முக்கிய விதி மாற்றம், அடுத்த மாதம் முதல் புதிய ரூல் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR