இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய தொலை உணர் மையம் வயநாட்டில் உள்ள சூரல்மாலாவில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் உள்ள செயற்கைகோள் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் எவ்வளவு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக நமக்கு காட்டுகிறது. இந்த பேரழிவில் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலப்பரப்பு இடம் இல்லாமல் போய்யுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், நிலச்சரிவிற்கு பின்பு உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது. என்எஸ்ஆர்சி மூலம் எடுக்கப்பட்ட படங்களில், சூரல்மாலா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைப்பொழிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் பல வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. தற்போது பேரிடர் மீட்பு குழுவினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க | கேரள நிலச்சரிவில் அரசியல் செய்கிறது பாஜக: செல்வப்பெருந்தகை
வயநாடு நிலச்சரிவு இறந்தவர்களின் எண்ணிக்கை
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் பெய்து வரும் கடுமையான மழையின் காரணமாக நிலச்சரி ஏற்பட்டு, சில கிராமங்களே காணாமல் போன நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இறப்பு எண்ணிக்கை 300க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இன்று சனிக்கிழமை 5வது நாளாக நிலச்சரிவில் இறந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு குழுக்கள் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் மோப்ப நாய்களை பயன்படுத்தி இறந்தவர்களின் உடல்கள் மற்றும் நிலச்சரிவில் தப்பிப்பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இதுவரை ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் மோசமான ஒன்றாக வயநாடு நிலச்சரிவு பார்க்கப்படுகிறது.
#WATCH | Kerala: Search and rescue operation in Landslide affected areas in Wayanad, enters 4th day.
The death toll stands at 308. pic.twitter.com/SdIltdqnDn
— ANI (@ANI) August 3, 2024
வயநாடு நிலச்சரிவில் இருந்து இதுவரை அதிகார்வப்பூர்வமாக 210 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 187 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேடுதல் வேட்டையில் படவெட்டி குன்னுவுக்கு அருகில் ஒரு வீட்டில் இருந்து நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 40 மீட்பு குழுக்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு பகுதியில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காஸ்ரகோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மேலும் படிக்க | 'அப்போவே எச்சரித்தோம்... என்ன செய்தது கேரள அரசு...' - திடீரென சூடான அமித் ஷா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ