போதையில் புத்திமாறுமா... 30 ஆண்டுக்கு முன் கொலை - இப்போது சிக்கிய கொலையாளி - உண்மை கசிந்தது எப்படி?

Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அதுகுறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2023, 08:09 PM IST
  • குற்றச்செயலை செய்யும் போது குற்றவாளியின் வயது 19.
  • கொலை செய்துவிட்டு தனது சொந்த ஊரைவிட்டு ஓடி, அடையாளத்தை மாற்றி வாழ்ந்துள்ளார்.
  • இவரின் மனைவி தற்போது அரசியலில் ஆக்டிவாக உள்ளார்.
போதையில் புத்திமாறுமா... 30 ஆண்டுக்கு முன் கொலை - இப்போது சிக்கிய கொலையாளி - உண்மை கசிந்தது எப்படி? title=

Crime News: மது மற்றும் அதீத நம்பிக்கையால் 30 ஆண்டுகளாக காவல்துறையின் கண்ணில் வெற்றிகரமாக மண்ணைத்தூவி வாழ்ந்து வந்த ஒரு நபர், அவர் செய்த இரட்டைக் கொலை மற்றும் கொள்ளை பற்றிய விவரங்களைக் போதையில் உலறிய சம்பவத்தால், அவர் கைதுசெய்யப்பட்டார். 

1993ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், குற்றவாளி அவினாஷ் பவாரும் மேலும் இருவர் லோனாவாலாவில் உள்ள அவர்களது வீட்டில் கொள்ளையடிக்கும் போது 55 வயது ஆணும், அவரது 50 வயது மனைவியும் கொல்லப்பட்டனர். மற்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அப்போது 19 வயதாக இருந்த பவார், தனது தாயை விட்டுவிட்டு டெல்லிக்கு தப்பிச் சென்றார்.

பின்னர் மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகருக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு அமித் பவார் என்ற பெயரில் ஓட்டுநர் உரிமம் பெற்றார். அவுரங்காபாத்தில் இருந்து, பவார் பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் அஹமத்நகருக்குச் சென்றார். இறுதியாக மும்பையின் விக்ரோலியில் குடியேறினார். 

மேலும் படிக்க | சிவன் சொத்து குல நாசம்! கேதாரீஸ்வரர் சும்மா விடமாட்டார்! வைரலாகும் வீடியோ

பவார் தனது புதிய பெயரில் ஆதார் அட்டையைப் பெற்றார், திருமணம் செய்து கொண்டார் மற்றும் அவரது மனைவிக்கு வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் உறுதி செய்தார். இதிலேயே அவருக்கு முப்பது ஆண்டுகளும் ஓடிவிட்டன. இப்போது 49 வயதாகும் பவார் இதனை திரும்பி பார்க்கவில்லை. 1993இல் அவர் வெளியேறிய பிறகு, அவர் லோனாவாலாவுக்குச் செல்லவில்லை. அங்கு வசிக்கும் தனது தாயையோ அல்லது அவரது மனைவியின் பெற்றோரையோ கூட சந்திக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தான் இப்போது பிடிபடமாட்டேன் என்ற நம்பிக்கையில், பவார் சில நாட்களுக்கு முன்பு மது அருந்தும் அமர்வின் போது ஒருவரிடம் இரட்டைக் கொலை மற்றும் கொள்ளை பற்றிய உண்மையை கொட்டினார். மும்பை குற்றப்பிரிவின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக்குக்கு அந்த நபர் மூலம் தகவல் கிடைத்தது. பவார் வெள்ளிக்கிழமை விக்ரோலியில் போலீசார் கைது செய்யப்பட்டார்.

மும்பை குற்றப்பிரிவின் துணை போலீஸ் கமிஷனர் ராஜ் திலக் ரோஷன், "அவினாஷ் பவார் 30 ஆண்டுகளுக்கு முன்பு லோனாவாலாவில் நடந்த இரட்டை கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர். பலியானவர்கள் பவாரை அறிந்த வயதான தம்பதிகள், அவர்கள் வீட்டிற்கு அருகில் கடை வைத்திருந்தார். அவர் மேலும் இரண்டு ஆண்களுடன் சேர்ந்து அவர்களது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, கொள்ளையின் போது தம்பதியைக் கொன்றார். மற்ற இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது, ​​பவார் ஓடிப்போய் தனது பெயரை மாற்றிக்கொண்டார். அவர் விக்ரோலியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்," என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | முன்கூட்டியே மக்களவைத் தேர்தல்: எச்சரிக்கும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News