புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக அமெரிக்காவின் கருத்துக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. சிஏஏ தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை என்றும், முழு விவரங்களை அறிந்துக்கொள்ளாமல் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவாக கூறியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவது தொடர்பானது மற்றும் ஒருவரின் குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மத சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இந்தியாவின் பலதரப்பட்ட மரபுகளைப் பற்றி அறியாதவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளது.
மேலும் படிக்க - Citizenship Amendment Act: “கவலையளிக்கிறது” சிஏஏ-வுக்கு எதிராக அமெரிக்கா கருத்து!
சிஏஏ குறித்து அமெரிக்கா என்ன சொன்னது?
முன்னதாக, இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. மேலும் சிஏஏ அமலாக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமெரிக்கா கூறியது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று கூறுகையில், "மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். மத சுதந்திரம் மற்றும் சட்டத்தின் கீழ் அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகள்" எனக் கூறியிருந்தார்.
அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. சிஏஏ என்பது குடியுரிமை வழங்குவதுடன் தொடர்புடையது, குடியுரிமையைப் பறிப்பது அல்ல. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். நாட்டின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு இது செயல்படுத்தப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ