2020 ஜூன் 1 முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களை முன்பதிவு செய்வதற்கான இட ஒதுக்கீடு விதிகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று முதல் (மே 21-ஆம் தேதி காலை 10 மணி முதல்) தொடங்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் பட்டியலில் பிரபலமான ரயில்களான டுரோன்டோஸ், சம்பார்க் கிரான்டிஸ், ஜான் சதாப்திஸ் மற்றும் பூர்வா எக்ஸ்பிரஸ் மற்றும் பல இடம்பிடித்துள்ளன. இவற்றில் AC மற்றும் Non-AC வகுப்புகள் மற்றும் முழுமையாக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகள் இருக்கும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு பயணிகள் IRCTC வலைத்தளம் அல்லது பயன்பாட்டின் உதவியை மட்டுமே அனுக வேண்டும். முன்பதிவு காலம் ஜூன் 1 முதல், ரயில்கள் இயக்க அதிகபட்சம் 30 நாட்களாகவும் இருக்கும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways has released the list of the 200 trains which will be operated from 1st June: Government of India pic.twitter.com/U1SmC4Bn8C
— ANI (@ANI) May 20, 2020
இந்த ரயில்கள் AC, Non-AC வகுப்புகள் கொண்ட முழு முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களாக இருக்கும்; பொது பெட்டிகளில் உட்கார இட ஒதுக்கப்பட்டிருக்கும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. அதாவது இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இருக்காது.
பொது பெட்டிகளில் முன்பதிவு செய்ய இரண்டாவது இருக்கை (2S) கட்டணம் வசூலிக்கப்படும், மேலும் அனைத்து பயணிகளுக்கும் இடங்கள் வழங்கப்படும்.
முன்பதிவு செய்யப்படாத (UTS) டிக்கெட்டுகள் வழங்கப்படமாட்டாது, பயணத்தின் போது எந்தவொரு பயணிகளுக்கும் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது, தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் முன்பதிவு அனுமதிக்கப்படாது. எந்தவொரு ரயில் நிலையத்திலும் டிக்கெட் விற்கப்படாது, பயணிகள் டிக்கெட் வாங்க ரயில் நிலையத்திற்கு வரக்கூடாது.
முன்னதாக, பிற மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்செல்ல தினசரி 200 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் இந்திய ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 400-ஆக உயர்த்தும். புலம்பெயர்ந்தோர் அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், அடுத்த சில நாட்களில் இந்திய ரயில்வே அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வே மே 1 முதல் 1,813 'ஷ்ராமிக் ஸ்பெஷல்' ரயில்களை இயக்கியுள்ளதுடன் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை சொந்த மாநிலத்திற்கு அழைத்து சென்றுள்ளது என்று தேசிய போக்குவரத்து நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.