வரும் 2030 ஆம் ஆண்டு இறுதிக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்!!
2030 இறுதிக்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கும் இலக்கை இந்திய ரயில்வே (Indian Railway) நிர்ணயித்துள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தெரிவித்தார்.
"2030 க்குள் நாங்கள் நிகர-பூஜ்ஜிய இரயில்வேயாக இருப்போம், எங்கள் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக இருக்கும். இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 8 பில்லியன் பயணிகளையும் 1.2 பில்லியன் டன் சரக்குகளையும் கொண்டு செல்கிறது. இந்த அளவிலான உலகின் முதல் ரயில்வே பச்சை நிறமாக இருக்கும்," கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
By 2030 we will be a net-zero railway, our carbon emission will be zero.
Indian Railways transports nearly 8 billion passengers and 1.2 billion tonnes of freight every year.
Ours will be the world's first Railways of this scale to go green. pic.twitter.com/x08SmseRrP
— Piyush Goyal (@PiyushGoyal) August 26, 2020
அரசாங்க தரவுகளின்படி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ரயில் நெட்வொர்க் உலகின் நான்காவது பெரியது. இந்திய ரயில் நெட்வொர்க் 67,368 கி.மீ தடங்களை உள்ளடக்கியது மற்றும் 7,300 நிலையங்களைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் இருந்து கார்பன் வெளியேற்றம் 6.84 மில்லியன் டன் என்று அரசாங்கத்தின் சிந்தனைக் குழுவான NITI ஆயோக் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.
ALSO READ | Indian Railway: ரயில் பயணத்தில் ஏதேனும் சிக்கலா, அப்போ இங்கே புகார் செய்யுங்கள்...!
"இந்திய ரயில்வே, வரும் ஆண்டுகளில் 100 சதவீதம் மின்சாரத்தால் ரயில்களை இயக்கும் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன் மூலம், உலகிலேயே மின்சாரம் மூலம் இயங்கும் மிகப் பெரிய ரயில் சேவை வலையமைப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்" என்று கோயல் கூறினார்.
மேலும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் ரயில்வேக்கு சொந்தமான உபரி நிலங்கள் மற்றும் ரயில் பாதைக்கு அருகிலிருக்கும் நிலங்களில் சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மூலம் 2 கோடி கிலோ வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வேக்கான ஒட்டுமொத்த மின் தேவையும் இதன் மூலம் பூா்த்தி செய்யப்படும்.
இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சூரிய சக்தி உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்கும் வைகயில், பேட்டரி சேமிப்பு திறனையும் தேவைக்கேற்ப ரயில்வே அதிகரிக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டில், பழைய நிலக்கரி ஆலைகளை மையம் மூடுவதாக கோயல் கூறியிருந்தார். ரயில் நெட்வொர்க்கின் 100% மின்மயமாக்கலும் ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.