சர்வதேச சவால்களை சமாளிக்க இந்தியா - இத்தாலி கூட்டணி - மோடி!

சர்வதேச சவால்களை சமாளிக்க இந்தியா - இத்தாலி நாடுகள் கூட்டணி அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : Oct 30, 2018, 08:49 PM IST
சர்வதேச சவால்களை சமாளிக்க இந்தியா - இத்தாலி கூட்டணி - மோடி! title=

சர்வதேச சவால்களை சமாளிக்க இந்தியா - இத்தாலி நாடுகள் கூட்டணி அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

புது டெல்லியில் நடைபெற்ற இந்தியா - இத்தாலி இடையிலான தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தொழில்நுட்பம் உள்ளூர் சார்ந்ததாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சில் உரையாற்றிய பிரதமர் தெரிவிக்கையில்... உலகம் 4-வது டிஜிட்டல் புரட்சி பற்றி பேசி வருகிறது. இந்தியாவும், இத்தாலியும் தங்களுடைய திறமையின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்தணை முறை அதிகரித்து வருகிறது என தெரிவித்த அவர், மாதந்தோறும் ரூ.250 கோடி மதிப்பிளான பணப்பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 1GB டேட்டா கட்டணம் 90% குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களின் முடிவுகள் ஆராய்ச்சி மையங்களுக்கு மட்டும் பயன்படாமல், மக்களை பயனுள்ள வகையில் அமைதல் வேண்டும் எனவும் தெரிவத்தார். விஞ்ஞான அறிவு என்பது உலகளாவியது என்றாலும், தொழில்நுட்பங்கள் உள்ளூர் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்வதேச சவால்களை சமாளிக்க இரு நாடுகளும் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்த மோடி, உரிய காலம் வரும் போது இந்தியா - இத்தாலி இடையிலான ஒத்துழைப்பு அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, இத்தாலி பிரதமர் கியூசெபே கான்டிபிரதமர் மோடியை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்

Trending News