Republic Day 2022: 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 9 அமைச்சகங்களின் அட்டவணை இன்று ராஜ்பாத்தில் காட்சிப்படுத்தப்படும்
புது தில்லி: புதன்கிழமை (ஜனவரி 26, 2022) ராஜ வீதியில் இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் மொத்தம் 21 அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12, அமைச்சகங்களின் 9 ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் தகவலைப் பகிர்ந்துகொண்ட பாதுகாப்புத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி நம்பிபூ மரின்மாய், “குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12 அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் என்றார்.
மேகாலயா
மேகாலயாவின் 50 ஆண்டுகால மாநில அந்தஸ்து, அம்மாநில கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவி குழுக்கள் மூலம் சாதித்த பெண்களுக்கு கவுரவ படுத்தும் வகையில் மேகாலயாவின் அலங்கார ஊர்தியில் இருக்கும். மூங்கில் மற்றும் கரும்பு கைவினைப்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தயாரிப்புகள், பெண்கள் தலைமையிலான கூட்டுறவுச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிகளுக்கும், மாநிலப் பொருளாதாரத்தில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்கும் சான்றாகும் என்று அவர் கூறினார்.
குஜராத்
குஜராத்தின் அலங்கார ஊர்தி குஜராத்தின் பழங்குடி புரட்சியாளர்களைக் எடுத்துக் காட்டும் அதே வேளையில், கோவாவின் அலங்கார ஊர்தி பல்வேறு வரலாற்று மற்றும் இயற்கை அழகுகளையும் 'மறந்து போன பாரம்பரிய சின்னங்கள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது என்று பாதுகாப்பு துறை PRO தெரிவித்துள்ளது.
ALSO READ | Watch Video: நேதாஜியின் மின் ஒளி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
ஹரியானா
நாட்டின் மக்கள் தொகையில் 2.9 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஒலிம்பிக் உட்பட தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் நாடு வென்ற மொத்த பதக்கங்களில் அதிகபட்ச பதக்கங்களைக் கொண்டு வந்து நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறது ஹரியானா.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநில அட்டவணை ஆன்மிக தளங்களுக்கான சாலைத் தொடர்பில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் அடிப்படையிலானது
அருணாச்சல பிரதேசம்
'அருணாச்சலப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை விரிவுபடுத்தும் ஏகாதிபத்திய கொள்கைக்கு எதிராக துணிச்சலாகப் போராடிய பழங்குடியினரின் வீரத்தை எடுத்துக்காட்டுகிறது.
கர்நாடகா
கர்நாடகாவின் அலங்கார ஊர்தி, 'பாரம்பரிய கைவினைப் பொருட்களின் நம்பிக்கை' என்ற கருப்பொருளில் அமைந்துள்ளது
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அலங்கார ஊர்தி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி, மாறி வரும் சூழ்நிலையை எடுத்துக்காட்டும்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பசு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
உத்தரப்பிரதேசம்
ODOP (ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி) திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு மூலம் அடைந்துள்ள சாதனைகளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்
2022 ஆம் ஆண்டுக்கான குடியரசு தின அணிவகுப்புக்கான பஞ்சாபின் அலங்கார ஊர்தி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மாநிலத்தின் மகத்தான பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி மாநிலத்தின் பல்லுயிர் மற்றும் உயிரியல் சின்னங்களை அடிப்படையாகக் கொண்டது.
கோவா
கோவாவின் அலங்கார ஊர்தி பல்வேறு வரலாற்று மற்றும் இயற்கை அழகுகளையும் 'மறந்து போன பாரம்பரிய சின்னங்கள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது என்று பாதுகாப்பு துறை PRO தெரிவித்துள்ளது.
இவை தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், தபால் துறை மற்றும் CRPF ஆகியவற்றின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் அடங்கும்.
ALSO READ | 75 ஆண்டுகளில் முதன்முறையாக குடியரசு தின அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR