இந்திய கடற்படையில் குறிப்பிடத்தக்க முக்கிய பொறுப்பில் 2 பெண் அதிகாரிகள்!!

இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் முதல் முறையாக சப் லெப்டினன்ட் ரிதி சிங் மற்றும் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி என்ற 2 பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Last Updated : Sep 22, 2020, 09:37 AM IST
இந்திய கடற்படையில் குறிப்பிடத்தக்க முக்கிய பொறுப்பில் 2 பெண் அதிகாரிகள்!! title=

இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் முதல் முறையாக சப் லெப்டினன்ட் ரிதி சிங் மற்றும் சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி என்ற 2 பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையில் (Indian navy) பாலின சமத்துவத்தை மறுவரையறை செய்யும் நடவடிக்கையில், சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரிதி சிங் (Kumudini Tyagi and SLt Riti Singh) ஆகியோர் கப்பலின் பணியாளர்களின் ஒரு பகுதியாக கடற்படை போர்க்கப்பல்களில் ஈடுபடுத்தப்படும் முதல் பெண் அதிகாரிகளாக நியமனம் செய்துள்ளனர். 

இந்திய கடற்படையின் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகளை நியமித்திருந்தாலும், போர்க்கப்பல்களில் இதுவரை பல காரணங்களால் பெண்கள் நியமிக்கப்படவில்லை. தனியுரிமை இல்லாதது மற்றும் பாலினம் சார்ந்த குளியலறை கிடைப்பது உட்பட வசதிகள் காரணமாக இதுவரை அவர்கள் நியமிக்கப்படவில்லை. 

கடற்படையில் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் மற்றொரு முயற்சியாக போர்க் கப்பல்களில் முதல் முறையாக சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி , சப் லெப்டினன்ட் ரிதி சிங் ஆகிய 2 பெண்களை பணியமர்த்தி உள்ளனர்.  இருவரும் கப்பல் பணியாளர்களில் ஒரு பகுதியாக, கடற்படை போர்க் கப்பல்களில் பணியமர்த்தப்படும் முதல் பெண் அதிகாரிகள் என்ற சிறப்பை பெறவுள்ளனர்.

ALSO READ | RRB NTPC Recruitment 2020: விண்ணப்ப படிவங்களின் நிலை என்ன?... எப்போது தேர்வு... 

இவர்கள் இருவரும் போர்க் கப்பல்களில் உள்ள பன்னோக்கு ஹெலிகாப்டர்களில் சென்சார் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சிக்கு பிறகு கடற்படையின் புதிய MH-60R ஹெலிகாப்டர்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர்.

உலகின் மிக நவீன பன்னோக்கு ஹெலிகாப்டர்களாக MH-60R ஹெலிகாப்டர்கள் கருதப்படுகின்றன. இவை, சென்சார் கருவிகள் மூலம் எதிரிகளின் ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. இந்த ரகத்தை சேர்ந்த 24 ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு கொள்முதல் செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 2021 தொடக்கத்தில் இந்த ஹெலிகாப்டர்களுக்கான டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த முதல் 5 ரபேல் விமானங்கள் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. அம்பாலாவில் இருந்து செயல்படும் விமானப் படையின் ‘தங்க அம்புகள்’ படைப் பிரிவில் இவை சேர்க்கப்பட்டன. ரஃபேல் படைப் பிரிவில் தற்போது விமானிகள் அனைவரும் ஆண்களாக உள்ளனர். இந்நிலையில், விமானப் படையில் தற்போதுள்ள 10 பெண் விமானிகளில் ஒருவரை ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிக்கு விமானப் படை மாற்றியுள்ளது.

Trending News