அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவர்களின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி தேவையான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நுழைவை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரமுள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு தலைவர்கள் கூறினர். அது மட்டுமில்லாமல் சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்கும் விதமாக டொனால்ட் டிரம்ப் புதிய கொள்கையை அறிமுகம் செய்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தகது.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயற்ச்சி செய்ததாக கூறி சுமார் 2,400 இந்தியர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதுக்குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் (NAPA) நிர்வாகம் தலைவர் சத்னம் எஸ் சஹால் கூறியது, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலோர் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள். இந்த விசியத்தில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.
NAPA மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, தற்போது அமெரிக்காவில் உள்ள 86 சிறைச்சாலைகளில் 2,383 இந்தியர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபிக்கள் எப்படி அமெரிக்காவில் நுழைய முடிகிறது என்று கேட்டதற்கு NAPA தலைவர் சத்னம் எஸ் சஹால், அவர்கள் பெரும்பாலும் கடத்தல் சம்பவங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். அவர்கள் தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முயற்ச்சிக்கிறார்கள். அவர்களுக்கு சில அமைப்புகள் உதவி செய்கிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ஒவ்வொரு நபரிடமும் ரூபாய் 35-50 லட்சம் வசூலிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
இப்படி சட்டவிரோதமாக நுழைய முயற்ச்சி செய்பவர்கள், சில சமயங்களில் இலக்கை அடைய முடியாததால், அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. மேலும் கடன் தொல்லைகளால் அவர்கள் சுரண்டப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார். சில சமயம் மரணம் கூட ஏற்படுவது உண்டு எனவும் கூறினார்.