அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூர் பகுதியில் கணவர் மனைவி மீது நடந்திய கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதாவது கணவர் மனைவியிடம் முத்தம் (KISS) தருமாறு கூறிய பின்னர், மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண், தனது கணவர் முத்தம் செய்யச் சொன்னதாக போலீசாரிடம் கூறினார். அவர் கணவர் முத்தம் கேட்டுள்ளார். அப்பொழுது மனைவி அவரை முத்தம் செய்ய முயன்ற போது, அந்த சமயத்தில் மனைவியின் நாக்கை வெளியே இழுத்து கத்தியால் வெட்டியுள்ளார் கணவர். கத்தியால் நாக்கை வெட்டியா பிறகு, அந்தப் பெண் வலியால் சத்தமாகக் கத்தியுள்ளார். இதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட கணவர், அவள் மனைவியை அறையில் பூட்டி விட்டு தப்பிச்சென்றார். குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது வேஜல்பூர் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன் மனைவி எப்படி இருக்கிறாள் என பார்க்க மருத்துவமனை வந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட அஜூப் பாய் மன்சூரி தன் மனைவியுடன் வேஜல்பூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். அயூப் சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது மனைவியுடன் அவருக்கு சண்டை தொடங்கி உள்ளது. சின்ன சின்ன விஷயங்களை குறித்து இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்ப்பட்டு உள்ளது. புதன்கிழமை இரவு, அயூப் திடீரென்று தனது மனைவியிடம் அன்பைக் காட்டத் தொடங்கி உள்ளான். இந்த நேரத்தில், அவர் தனது மனைவியை கிஸ் செய்யச் சொல்லியுள்ளார்.
என்னை சமாதனம் படுத்தத்தான் கணவர் தன் மீது அன்பை காட்டுகிறார் என்று உணர்ந்த மனைவி, அவரிடமும் அன்பைக் காட்டி உள்ளார். தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் சண்டைகளை மறந்து, தன் கணவரை முத்தம் செய்துள்ளார். அப்பொழுது அவரின் கணவர் மனைவி நாக்கை கத்தியால் வெட்டியுள்ளார். வலியால் துடித்த மனைவி கூச்சல் போட்டதால், அங்கிருந்து கணவர் ஓடிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண், தனது சகோதரியிடம் முழு சம்பவத்தையும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட கணவரை போலீசார் தேடி வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட கணவர் தனது மனைவியின் நிலைமையை அறிந்து கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனையைக்கு வந்து குற்றம் சாட்டப்பட்ட கணவரை கைது செய்தனர்.