நியூடெல்லி: ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பாலாசோர் பகுதியில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதி வழியாக ரயில் சேவைகள் தொடங்கின. ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த பாலாசோர் பகுதியை ஹவுரா-புரி வந்தே பாரத் ரயில் கடந்து சென்றுள்ளது.
விபத்து நடந்த 51 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில் இயக்கத்தை இந்திய ரயில்வே தொடங்கிவிட்டது.
கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 275 பேர் உயிரிழந்தனர். பயங்கர விபத்தை அடுத்து மீட்பு பணிகள் முடிவடைந்து ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்டது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
#WATCH | Howrah - Puri Vande Bharat Express crosses from Odisha’s Balasore where the deadly #TrainAccident took place on June 2.
Indian Railways resumed train movement on the affected tracks within 51 hours of the accident. pic.twitter.com/myosAUgC4H
— ANI (@ANI) June 5, 2023
ரயில் பாதையின் மெயின் தண்டவாளங்களும், பாதையும் சீரமைக்கப்பட்ட நிலையில் சோதனை முறையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின, அதனை அடுத்து பூரி வந்தே பாரத் ரயில், அந்தப் பாதையில் சென்றது.
மேலும் படிக்க | 20 நிமிடங்களுக்குள் மூன்று ரயில்கள் மோதி விபத்து! பயணிகளின் நிலை என்ன? கள நிலவரம்
விபத்து நடந்த 51 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில் இயக்கத்தை இந்திய ரயில்வே தொடங்கியது.
ஒடிசாவின் பாலாசோரில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் நடந்த மூன்று ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தின் போது 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான ரயில்வே விபத்து இது. ஞாயிற்றுக்கிழமை பாலசோர் டிரிபிள் ரயில் மோதிய இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் 288 பயணிகளின் உயிரைப் பறித்த விபத்து நடந்ததாகக் கூறினார்.
மேலும் படிக்க | OIL CUT: சவுதி அரேபியாவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! இதன் எதிரொலி என்ன?
இதனிடையே, இறப்பு எண்ணிக்கையை ஒடிசா மாநில அரசு குறைத்துச் சொல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஆனால், பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை மறைக்க வேண்டும் என்ற அவசியமோ அல்லது எண்ணமோ அரசாங்கத்திற்கு எந்த எண்ணமும் இல்லை என ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா தெரிவித்தார்.
இறப்பு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஒடிசா தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, ஒடிசா வெளிப்படைத்தன்மையை நம்புகிறது என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை 288 என்ற ரயில்வேயின் தகவலின் அடிப்படையில் முதலில் 288 என்று சொன்னோம். ஆனால், பாலசோர் மாவட்ட ஆட்சியர் சரிபார்த்தபோது, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை 275 ஆக இருந்தது என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும் படிக்க | பலி எண்ணிக்கை 288இல் இருந்து 275ஆக குறைந்தது எப்படி? விளக்கமளிக்கும் ஒடிசா அரசு
விபத்து நடந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் நுழைவதற்கும் தடை இல்லை என்று கூறிய ஒடிசா மாநில தலைமைச் செயலாளர், "மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழு பொதுமக்களின் பார்வையில் நடந்தன" என்று அவர் கூறினார்.
இறப்பு புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தைச் சேர்ந்த 61 பேர் இறந்துள்ளனர் என்றும் 182 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினார். மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு தொடர்பாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷிவினி வைஷ்ணா பதில் ஏதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ