பலியான 3 ஐஏஎஸ் மாணவர்கள்... டெல்லி வெள்ளத்தின் பகீர் வீடியோ - உயிரிழப்புக்கு இதுதான் காரணம்!

Delhi IAS Aspirants Died: டெல்லியில் கோச்சிங் சென்டரில் புகுந்த வெள்ளத்தால் அங்கு பயின்று வந்த மூன்று மாணவர்கள், பரிதாபகமாக உயிரிழந்த சம்பவத்திற்கு முன் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 29, 2024, 10:15 AM IST
  • டெல்லியின் பல பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு உள்ளது.
  • மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
  • இதனை தொடர்ந்து 13 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பலியான 3 ஐஏஎஸ் மாணவர்கள்... டெல்லி வெள்ளத்தின் பகீர் வீடியோ - உயிரிழப்புக்கு இதுதான் காரணம்! title=

Delhi Three IAS Aspirants Died: டெல்லியில் கடுமையாக மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. அதிலும் கடந்த சனிக்கிழமை இரவு அன்று டெல்லியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றின் கீழ் தளத்தில் மழைநீர் காற்றாற்று வெள்ளம் போல் புகுந்ததில், அங்கு சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

மேற்கு டெல்லி பகுதியில் ராஜேந்திர நகரில் உள்ள Rau's IAS Study Circle என்ற கோச்சிங் சென்டரில்தான் இந்த கோர சம்பவம் நடந்தது. அந்த கோச்சிங் சென்டர் அதன் கீழ் தளத்தை நூலகமாக அதுவும் சட்டத்திற்கு புறம்பாக அமைத்திருக்கிறது. சனிக்கிழமை இரவு கடுமையான வெள்ளத்தால் அந்த கீழ் தளம் முழுவதும் நீர் நிரம்பியது. இதில் பல மாணவர்கள் சிக்கித் தவித்துள்ளனர். உயிரிழந்த மூன்று பேரும் ஐஏஎஸ் பயிற்சிக்காக டெல்லி வந்தவர்கள் ஆவார்.

மூன்று பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது ஷ்ரேயா யாதவ், தெலங்கானா செகந்தராபாத் நகரை சேர்ந்த 25 வயதான தான்யா சோனி, கேரளாவின் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 28 வயதான நெவின் டால்வின் ஆகியோர் மூவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக இயங்கிவந்த 13 கோச்சிங் சென்டர்களுக்கு டெல்லி மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

மேலும் படிக்க | சுனிதா பூமிக்கு வர போறாங்க! ஒருவழியாக வாயை திறந்த போயிங் நிறுவனம்.

வெளியான வீடியோ

இந்நிலையில், Rau's IAS Study Circle கட்டடத்தின் கீழ் தளத்தில் மூன்று பேர் உயிரிழந்து அவர்களின் உடல்கள் கண்டெடுப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன், அங்கு ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. படிக்கட்டுகளில் இருந்து தண்ணீர் ஆறு போல் வழிந்து ஓடுகிறதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அங்கு ஒருவர் வந்து அடித்தளத்தில் இருப்போர் அனைவரும் வேகமாக வெளியேறுமாறு கூறுகிறார். "குழந்தைகளே, சீக்கிரம் வாருங்கள். சீக்கிரம், சீக்கிரம்... யாராவது இருக்கிறீர்களா?, கீழே யாராவது இருக்கிறீர்களா?" என்ற குரல் அந்த வீடியோவில் கேட்கிறது. 

உயிரிழந்த மூன்று பேரும் அங்குதான் சிக்கியிருந்து உள்ளனர். மேலும் அங்கு ஏழு மணிநேரம் நடந்த மீட்புப்பணிக்கு பின்னர்தான் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் வெள்ளம் புகுந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த பகுதியில் மோசமான வடிகால் அமைப்பு இருப்பதால்தான் இந்த சம்பவம் நடந்ததாக குற்றஞ்சாட்டுப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் இடுப்பு அளவுக்கு வெள்ள நீர் புகுந்ததாக கூறப்படுகிறது. 

விசாரணையில் வெளியான தகவல்கள்

டெல்லி போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல குழுக்களை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவம் நடந்த கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் மீது பல குற்றச்சாட்டுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள தண்ணீரை வடிகால் செய்ய ஒரு அமைப்பே அங்கு இல்லை என டெல்லி தீயணைப்புத் துறைத் தலைவர் அதுல் கர்க் தெரிவித்தார். 

மேலும் அவர்,"இந்த கட்டடம் தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்று வாங்கியுள்ளது. ஆனால் அதில், அடித்தளத்தை ஸ்டோர் ரூமாக காட்டியிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் நிர்வாகம் அந்த அறையை வகுப்பறையாகவோ அல்லது நூலகமாகவோ பயன்படுத்தியது, சட்டத்திற்கு புறம்பானதாகும்" என்றார். அந்த கட்டடம் மூன்று மாடிகளை கொண்டதாகும். அந்த கோச்சிங் சென்டரின் உரிமையாளரும், ஒருங்கிணைப்பாளரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றமற்ற கொலைக் குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

மேலும் படிக்க |  ஆபாச படம் பார்த்துவிட்டு தனது தங்கையை கற்பழித்து கொலை செய்த சிறுவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News