கனமழை காரணமாக கேரளாவில் ஒரு சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!!
கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாடைந்துள்ளது. இதையொட்டி இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 10 பேர் உயிரிழந்தனர்.மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. கோழிக்கோடு, காசர்கோடு, கன்னூர், வயநாடு,இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. கரையோரங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகள் குறித்து தீவிரமான கண்காணிப்பை செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார். பம்பா, மலங்கரா, பூதத்தான்கெட்டு போன்ற ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.