Arvind Kejriwal 5 Announcements For Auto Drivers: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. கடந்த இரண்டு முறையும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியமைத்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இங்கு முதலமைச்சராக இருந்த நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சுமார் 6 மாதக்கால போராட்டத்திற்கு பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோதும் டெல்லி முதலமைச்சராகவே தொடர்ந்த நிலையில், அவர் ஜாமீன் பெற்ற பின்னர் அந்த பொறுப்பை ராஜினாமா செய்தார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதாக உறுதிபூண்டுள்ளார்.
நெருங்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல்
அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்த அதிஷி மர்லினா, டெல்லி முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு ஆட்சிக்காலம் நிறைவடைய இருப்பதால் விரைவில் அங்கு தேர்தல் ஆணையம், சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கிறது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
மக்களவை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிய நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் துடிப்புடன் இருக்கிறது. காங்கிரஸ் - ஆம் ஆத்மி இணைந்து இங்கு தேர்தலை சந்திக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருக்க அனைத்து கட்சிகளும் இப்போதே தலைநகரில் தேர்தல் வேலைகளை பரபரப்புடன் தொடங்கிவிட்டன எனலாம். குறிப்பாக, தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், ஆம் ஆத்மி கட்சி அதன் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஆட்டோ டிரைவர்களுக்கு 5 அறிவிப்புகள்
இது ஒருபுறம் இருக்க, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வீட்டில் இன்று மதிய உணவு அருந்தினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அவர்கள் வீட்டில் உணவருந்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆட்டோ ஓட்டுநர்களின் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,"நேற்று எனது வீட்டில் ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்தேன். இன்று நவ்னீத் என்ற ஆட்டோ ஓட்டுநரின் வீட்டில் உணவருந்த வந்திருக்கிறேன். இந்த சூழலில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான 5 அறிவிப்புகளை அறிவிக்கிறேன். வரும் பிப்ரவரியில் நான் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இந்த 5 அறிவிப்புகளையும் நடைமுறைப்படுத்துவேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர்,"அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்திற்கு ரூ.1 லட்சத்தை என அரசு வழங்கும். அடுத்து, தீபாவாளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடைக்கு ரூ.2,500 வழங்கப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆயுள் காப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். விபத்து காப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு கோச்சிங் வகுப்புகளுக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும். மேலும், அரசின் Pucho செயலி மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்" என அறிவித்தார்.
மேலும் படிக்க | கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ