அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து: செங்கோட்டையன்!

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.. 

Last Updated : Dec 16, 2020, 11:02 AM IST
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து: செங்கோட்டையன்! title=

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.. 

கொரோனா வைரஸ் (CoronaVirus) காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் (School) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு (Online Class) மூலம் கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை (Jayalalithaa statue) திறப்பு விழா புதன்கிழமை காலை நடந்தது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்தினர். 

ALSO READ | நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்.. அரசு அதிரடி!!

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (Sengottaiyan) கூறுகையில்., அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இல்லை. விருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம். இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று முதல்வர் அறிவிப்பார்.

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. 9 ஆம் வகுப்பு வரையிலும் 50 சதவீத பாடம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீதம் அளவுக்கு பாடம் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

ALSO READ | தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை நடத்தலாம்: செங்கோட்டையன்

இதற்க்கு முன்னதாக, அவர் “தனியார் பள்ளிள் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம். அதற்கு ஆட்சேபம் இல்லை. அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு (TN Govt) ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல் படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50 சதவீதம் பாடங்கள் குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படும் கூறியுள்ளது குறிப்பிடதக்கது. 

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News