ஆகஸ்ட்: GST வருவாய் ரூ.1,02 லட்சம் கோடியிலிருந்து ரூ.98,202 கோடியாக குறைவு

ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்து விட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2019, 01:15 PM IST
ஆகஸ்ட்: GST வருவாய் ரூ.1,02 லட்சம் கோடியிலிருந்து ரூ.98,202 கோடியாக குறைவு title=

புதுடெல்லி: ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்து விட்டது. 2019 ஆகஸ்ட் மாதத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் 98,202 கோடி ஆகும். அதுவே கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1,02,083 கோடியாக இருந்தது.

ஆகஸ்ட் மாத 98,202 கோடி ஜிஎஸ்டி வசூலில் சிஜிஎஸ்டி (CGST) 17,733 கோடியும், எஸ்ஜிஎஸ்டி (SGST) 24,239 கோடியும் மற்றும் ஐஜிஎஸ்டி (IGST) 48,958 கோடியும் வசூல் ஆகியுள்ளது. அதாவது ஆகஸ்ட் மாதத்தில், ஜிஎஸ்டி வருவாயில் மத்திய அரசின் பங்கு 40,898 கோடியாகவும், மாநிலங்களின் வருவாய் 40,862 கோடியாகவும் இருக்கிறது. 

ஆகஸ்ட் 2018 உடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வருவாயில் 4.51 சதவீதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த மாதத்தில் 3881 கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிதியாண்டைப் பற்றி (2019-20) பார்த்தால், ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1,13,865 கோடியாகவும், மே மாதத்தில் 1,00,289 கோடியாகவும், ஜூன் மாதத்தில் 99,939 கோடி மற்றும் ஜூலை மாதத்தில் 1,02,083 கோடியாக இருந்தது. 

Trending News