புனே: நோவாவாக்ஸ் இன்க் உருவாக்கிய கோவிட் -19 தடுப்பூசி கோவோவாக்ஸின் (Covovax) முதல் தொகுப்பு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் புனே நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது என்று எஸ்ஐஐ தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"இந்த வாரம் புனேவில் உள்ள எங்கள் உற்பத்தி நிறுவனத்தில் கோவோவாக்ஸின் முதல் தொகுப்பு (நோவாவாக்சால் உருவாக்கப்பட்டது) தயாரிக்கப்படுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தடுப்பூசி நமது வருங்கால சந்ததியினரான 18 வயதிற்குட்பட்டவர்களைப் பாதுகாக்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய சீரம் நிறுவனத்தில் சிறப்பாக செய்யப்படும் குழுவுக்கு வாழ்த்துக்கள்" என்று பூனாவாலா (Adar Poonawalla) ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Excited to witness the first batch of Covovax (developed by @Novavax) being manufactured this week at our facility in Pune. The vaccine has great potential to protect our future generations below the age of 18. Trials are ongoing. Well done team @seruminstindia! pic.twitter.com/K4YzY6o73A
— Adar Poonawalla (@adarpoonawalla) June 25, 2021
ALSO READ: 3 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது
இந்த ஆண்டு மார்ச் மாதம், கோவோவாக்ஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் தொடங்கியதாகவும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இதை அறிமுகப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 2020 இல், அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான நோவாவாக்ஸ் இன்க், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளிலும், இந்தியாவிலும், அதன் COVID-19 தடுப்பூசி (COVID 19 Vaccination) மருந்தான NVX-CoV2373 இன் உருவாக்கம் மற்றும் வணிகமயமாக்கலுக்காக SII உடன் உரிம ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவித்தது.
இந்த ஆண்டு ஜனவரியில், சீரம் நிறுவனம் நாட்டில் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசியை வெளியிட்டது. இந்த தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனெகாவுடன் இணைந்து செயல்பட்டது.
ALSO READ: Bogus vaccination camp: பணத்துக்காக போலி தடுப்பூசி போடும் பகீர் தகவல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR