ஜி-20 மாநாடு: ஜெர்மனி சென்றடைந்தார் மோடி

Last Updated : Jul 7, 2017, 01:31 PM IST
ஜி-20 மாநாடு: ஜெர்மனி சென்றடைந்தார் மோடி title=

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார்.

ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹாம்பர்க் விமான நிலையத்தில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் அதிபர் டொனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 19 நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 

இரண்டு நாள் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அதன் பிறகு, 8-ம் தேதி(சனிக்கிழமை) பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.

Trending News