ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹாம்பர்க் விமான நிலையத்தில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஜி-20 மாநாட்டில் அதிபர் டொனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட 19 நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இரண்டு நாள் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அதன் பிறகு, 8-ம் தேதி(சனிக்கிழமை) பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜி-20 மாநாட்டில் பேசியது:- தெற்காசியாவில் ஒரு நாடு மட்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு உதவி மற்றும் ஆதரவு கொடுப்பவரை தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.