திரையரங்குகளில் அதிக விலைக்கு உணவுப் பொருளை விற்றால் அபராதம்!!

திரையரங்குகளில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் அந்த விற்பனையாளர்க்கு ரூ.1 லட்சம் அபராதம்!!

Last Updated : Jul 31, 2018, 09:59 AM IST
திரையரங்குகளில் அதிக விலைக்கு உணவுப் பொருளை விற்றால் அபராதம்!! title=

திரையரங்குகளில் உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் அந்த விற்பனையாளர்க்கு ரூ.1 லட்சம் அபராதம்!!

பல்வேறு திரையரங்குகளில் அதிக விலைக்கு உணவு பொருட்கள் விற்கப்படு வருகிறது. இதை தடுக்க பல்வேறு விதிமுறைகளை விதித்து தெலுங்கானா மாநிலத்தின் திரையரங்க கண்காணிப்பு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலைக்கு மேல் உணவுப்பொருட்களை விற்பது சட்டவிரோதம் என்றும், அதற்கு அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்முறை குற்றம்சாட்டப்படுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-வது முறை கைதாகினால், 50 ஆயிரம் அபராதமும் தொடர்ந்து தவறு செய்யும் பட்சத்தில் அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், அத்துடன் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி (நாளை) முதல் கடைபிடிக்கப்படும் என்றும், தொடர்ந்து திரையரங்குகள் கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

Trending News