நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து, இன்று அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. இது தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில், வாக்காளர் பட்டியலின் வெளிப்படை தன்மை, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்கு உச்சவரம்பு நிர்ணயம் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்படவுள்ளன.
மேலும், சமூக வலைதளங்களை தேர்தல் பிரசாரத்தின்போது எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றியும், இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
#Delhi: All party meeting called by Election Commission to begin shortly pic.twitter.com/3UWYOugXCC
— ANI (@ANI) August 27, 2018