DRDO-வின் ஆளில்லா விமானம் ருஸ்டோம் 2 கர்நாடகாவின் சித்ரதுர்காவில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது!!
பெங்களூரூ: பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO's) ஆளில்லா ட்ரோன் விமானம் (UAV) ருஸ்டோம் -2 செவ்வாய்க்கிழமை காலை கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஜோடி சிக்கனா ஹல்லியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நடந்தபோது, DRDO-ஓவின் வெளிப்புற சோதனை மற்றும் மதிப்பீட்டு வசதியான சல்லகேர் ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் விமானத்தின் சோதனை விமானம் நடந்து கொண்டிருந்தது.
ஆரம்பத்தில், இந்த விபத்து கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியதுடன், அதில் உள்ள பயணிகளை காப்பாற்ற அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதிஷ்ட வசமாக எந்தவொரு நபரும் UAV-க்குள்ளும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் இல்லை. இதையடுத்து, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர். மேலும், பலர் டி.ஆர்.டி.ஓ அதிகாரிகளும் போலீசாரும் அந்த இடத்தை அடையும் வரை செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தை வந்தண்டைந்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
Karnataka: One TAPAS Experimental Unmanned Aerial Vehicle belonging to Defence Research Development Organization (DRDO) crashed 17 km from Chitradurga test range, today. The UAV was airborne for one of its initial development flights and was undergoing a test when it crashed. pic.twitter.com/IhNJrBkFGu
— ANI (@ANI) September 17, 2019
DRDO முதன்முதலில் தேசிய தலைநகரில் டிஃபெக்ஸ் -2014 இல் ருஸ்டோம் 2 ஐக் காட்டியது மற்றும் 2018 பிப்ரவரி மாதம் முதல் முறையாக சித்ரதுர்காவில் உள்ள சாலகேரில் உள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் (ATR) விமானத்தை வெற்றிகரமாக பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.