டெல்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக டெல்லியிலிருந்து புறப்படும் 22 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தலைநகரம் டெல்லியில் கடுமையான குளிரால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அதிக நிலை குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளன. அந்தவகையில் இன்று கடும் குளிர் நிலவுகிறது. நகரின் பல பகுதிகளில் 'கடுமையான குளிர் நிலவுவதாக' வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் (Noida) காற்றின் தரம் 573 ஐ எட்டியது. குருகிராம் பற்றி பேசும்போது, இங்குள்ள காற்றின் தரம் டெல்லி மற்றும் நொய்டாவை விட சிறப்பாக இருக்கிறது. இங்கே காற்றின் தரம் 379 அளவீடு என பதிவாகி உள்ளது. மூடுபனியின் விளைவால் இன்று டெல்லி முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது. டெல்லியில் மாசு அளவு கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு டெல்லி மற்றும் என்,சி.ஆர் பகுதிகளில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் நடைபாதையில் வசிக்கும் மக்கள் அவதியுறுகின்றனர். குளிர் தாங்க முடியாத மக்கள் சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். கடுங்குளிரால் நடைபாதையில் வசிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
இந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து புறப்படும் 22 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் 2 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக இயக்கப்பட்டன.