டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டதன் காரணமாக, ராம்லீலா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஊற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் வீசும் புழுதி புயல் காரணத்தால் டெல்லியின் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Air Quality of #Delhi's Lodhi Road area: PM 2.5 remains 'moderate', while PM 10 is in 'severe' category. pic.twitter.com/qXcPsvLpuh
— ANI (@ANI) June 16, 2018
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக அபாயகரமானதாக உள்ள நிலையில் டெல்லியில் ராம்லீலா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஊற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.