மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியை... பெற்றோர் அதிரிச்சி

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 17, 2022, 02:10 PM IST
  • மாணவியை ஆசிரியை கத்திரிக்கோலால் தாக்கியுள்ளார்.
  • சக ஆசிரயை ஒருவர் தாக்குதல் நடத்திய ஆசிரியை தடுத்துள்ளார்.
  • தற்போது தாக்குதல் நடத்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
மாடியில் இருந்து மாணவியை தூக்கி வீசிய ஆசிரியை... பெற்றோர் அதிரிச்சி  title=

டெல்லி நகர் நிகாம் பிராத்மிக் வித்யாலயாவில் நேற்று (டிச. 16) காலை 11.15 மணியளவில் கொடூர சம்பவம் ஒன்று நடந்தது. ஆசிரியர் கீதா தேஷ்வால், வந்தனாவை ஆத்திரத்தில் முதல் மாடி வகுப்பறையில் இருந்து தூக்கி வீசியுள்ளார். அதற்கு முன்பு ஒரு கத்தரிக்கோலை பயன்படுத்தி மாணவியை தாக்கினார்.

மற்றொரு ஆசிரியையான ரியா, அந்த ஆசிரியர் தடுத்துள்ளார். இருப்பினும், அவரை மீறி மாணவியை கீதா தூக்கியெறிந்துள்ளார். முதல் மாடியில் இருந்து சிறுமி விழுந்ததும், ஏராளமானோர் திரண்டனர். பலத்த காயமடைந்த குழந்தையை அங்கிருந்த ஒருவர், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். 

மேலும் படிக்க | Accident: சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு சென்ற சென்னை தாம்பரம் சிறுமி விபத்தில் பலி

அங்கு மாணவிக்கு சிடி ஸ்கேன் உட்பட தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தை பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளது என்றும் நன்றாக பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் குழந்தை கீழே வீசப்பட்டதை அறிந்த மாணவி வந்தனாவின் தாய் கதறி அழுதார்.

இச்சம்பவத்தை அடுத்து, பள்ளிக்கு அருகே இருந்த குடியிருப்பாளர்கள் போலீசாரை அழைத்தனர். அவர்கள் ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஸ்வேதா சவுகான், சாட்சிகளின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி கூறினார். சிரியை கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியை நடத்தும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

குழந்தை விழுந்த இடத்தில், ஒரு ஜோடி கையுறைகள் மற்றும் சில எழுதுபொருட்கள் சிதறிக் கிடந்தன. இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பள்ளிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க | நடிகை ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட்! பழுவேட்டையர் நந்தினிக்கே ஆப்பு?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News