Pongal 2025: பொங்கலுக்கு சுற்றுலா செல்ல சூப்பர் ஐடியா... இந்த 3 பிளான்களை பாருங்க!

Pongal 2025: பொங்கலை முன்னிட்டு குடும்பத்துடன் நீங்கள் தமிழ்நாட்டில் சுற்றுலா செல்ல மூன்று சூப்பர் பிளான்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 11, 2025, 12:59 AM IST
  • பொங்கலுக்கு 6 நாள்கள் விடுமுறை இருக்கிறது.
  • ஜன. 13ஆம் தேதி பலரும் விடுப்பு எடுக்க திட்டமிடுவார்கள்.
  • அந்த வகையில், ஜன.11 முதல் ஜன.19 வரை விடுமுறை கிடைக்கிறது.
Pongal 2025: பொங்கலுக்கு சுற்றுலா செல்ல சூப்பர் ஐடியா... இந்த 3 பிளான்களை பாருங்க! title=

Pongal 2025, Best Tourist Plans: பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இப்போதே பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு படையெடுத்திருப்பீர்கள். குறிப்பாக, சென்னை வசிக்கும் பிற மாவட்டத்தினர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முன்பதிவு செய்தோ, செய்யாமலோ ரயிலிலோ, பேருந்திலோ புறப்பட்டிருப்பீர்கள்.

காரணம், அடுத்த 8-9 நாள்கள் அலுவலகம், பள்ளி, கல்லூரி சார்ந்த எவ்வித இடையூறுகளும் இல்லாமல் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்கலாம் என்பதால் வரும் திங்கட்கிழமை வேலை நாள் என்றாலும் கூட, சுய விடுப்பை எடுத்துக்கொண்டு பலரும் ஊர் பக்கம் பறந்துவிட்டனர். அதுவும் வீட்டில் இருந்தே பணிப்புரியம் வாய்ப்புள்ளவர்களுக்கும் லேப்டாப்பில் இருந்து ஒரு குட்டி பிரேக் கிடைக்கிறது.

9 நாள்களும் கொண்டாட்டம் தான்...

சொந்த ஊர் சென்றாலும் பலரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். நிச்சயம் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் எங்காவது சுற்றுலா செல்லவே விரும்புவார்கள். அதுவும் ஜன. 14ஆம் தேதி வீட்டில் பொங்கல் விட்டு, மதியம் சாப்பாடு முடிந்த உடனேயே சுற்றுலா தலங்களை நோக்கி தேனீக்களை போல பறக்கத்தொடங்குவார்கள். அதுவும் ஜன.19ஆம் தேதிவரை விடுமுறை இருப்பதால் 'சின்னராசை கையில பிடிக்க முடியாது' என்பதுதான் தங்களின் பிளான்களில் பிஸியாக சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

மேலும் படிக்க | Pongal 2025 Kolam: வீட்டில் கோலம் ஏன் போடுகிறோம், இவ்வளவு அழகான காரணம் உள்ளதா?

சுற்றுலா செல்ல 3 சூப்பர் பிளான்கள்

அதில் சிலர் நண்பர்களுடன் பார்ட்டி பண்ணுவதற்கு சுற்றுலா செல்வார்கள், சிலர் சாகசத்திற்காக சுற்றுலா செல்வார்கள், இன்னும் சிலர் குடும்பத்துடன் இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காக சுற்றுலா செல்வார்கள். அதிலும் சிலர் பொங்கலை ஒட்டி ஆன்மீக சுற்றுலாவாக கோயில்களுக்கும் செல்வார்கள்.

அப்படிப்பட்ட ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்பும் அன்பர்களுக்கும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட விரும்புபவர்களுக்கும் தான் இந்த கட்டுரை... அதாவது, பொங்கலை முன்னிட்டு நீங்கள் தமிழ்நாட்டில் செல்ல வேண்டிய 3 கோயில்களையும், அதன் அருகே இருக்கும் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

சுசீந்திரம் தாணுமலையான் கோவில்

கன்னியாகுமரியில் உள்ள சைவத் தளமான இந்த சுசீந்திரம் தாணுமலையான் கோவிலுக்கு நீங்கள் குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்ளலாம். மேலும் இந்த கோவிலுக்கு மட்டுமின்றி திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி கடற்கரை, குமரியம்மன் கோவில், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகிய சுற்றுலா தலங்களுக்கும் குடும்பத்துடன் சென்று வரலாம்.

ஆசைப்பாட்டால் அருகிலேயே இருக்கும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், கோவளம் கடற்கரை, குழந்தைகள் கண்டு மகிழ அங்குள்ள மிருகக்காட்சி சாலை என 2 நாள்கள் குடும்பத்துடன் நீங்கள் சிறப்பாக நேரத்தை செலவிடலாம்.

மேலும் படிக்க | போகி அன்று ‘இந்த’ 7 பொருட்களை எரிக்கவே கூடாது!! என்னென்ன தெரியுமா?

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் சாதாரண நாட்களிலேயே சிறப்பான அனுபவத்தை தரும் ஆன்மீக தலமாகும். அப்படியிருக்க தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு சென்றால் அதில் இன்னும் நிறைய சிறப்பான அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். இந்த கோவிலுக்கு சென்ற கையோடு அங்குள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் நீங்கள் செல்லலாம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி நினைவு அருங்காட்சியகம், சமணர் படுகை, பழமுதிர்சோலை, இரவுப் பொழுதில் செல்ல வண்டியூர் தெப்பக்குளம் உள்ளிட்ட பல இடங்கள் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. மதுரையில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கூட கண்டுகளிக்கலாம். விருப்பப்பட்டால் மதுரை அருகே பரவையில் உள்ள அதிசயம் அம்யூஸ்மென்ட் பார்க்கிற்கும் நீங்கள் குடும்பத்துடன் சென்று வரலாம்.

ஆதி கும்பேஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவில்கள் நிறைந்த கும்பகோண நகரில் நீங்கள் இந்த 2025ஆம் ஆண்டு பொங்கலை செலவிட்டால் இந்தாண்டே முழுவதும் உங்களுக்கு திவ்யமாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கும்பகோணத்தில் உள்ள இந்த ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சென்று பொங்கலை ஒட்டி நடைபெறும் சிறப்பு பூஜைகளில் சிவ பெருமானை தரிசனம் செய்யலாம். அதை தொடர்ந்து பல கோவில்கள் கும்பகோணத்திலேயே நிறைந்திருக்கின்றன. ஓரிரு மணிநேரம் பயணித்தால் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் சென்று வரலாம்.

சுவாமிமலை முருகன் கோவில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், திருக்கருக்காவூர் கர்ப்பரக்ஷாம்பிகை கோவில், தஞ்சாவூர் அரண்மனை, இராஜ இராஜன் மண்டபம், கல்லணை ஆகிய சுற்றுலா தலங்களுக்கும் சென்று உங்களது பொங்கல் பண்டிகையை கொண்டாடலாம்.

மேலும் படிக்க | Pongal 2025: காலங்களை கடந்த கலாச்சாரம்.... மகிழ்ச்சி, செழுமையை பொங்கச்செய்யும் பொங்கல் திருவிழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News