நீங்கள் அடிக்கடி பேசும் பழமொழிக்கு உண்மையான அர்த்தம் இதுதான் தெரிஞ்சிக்கோங்க..!

தமிழ் மக்கள் முதல் பல்வேறு மொழியின மக்கள் பழமொழியை அவர்களின் தாய் மொழிக்கேற்ப பேசுவர். அந்தவகையில் தமிழ் மக்கள் பயன்படுத்தும் புகழ்பெற்ற பழமொழிகளும் அதன் பொருள்களும் மற்றும் உண்மையான பொருள்களும் இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

 

தமிழக மக்கள் முதல் பாரம்பரியமாகப் பேசிவரும் பழமொழிகளை இன்றும் பேசி வருகின்றனர்.இதில் பேசப்படும் பழமொழிகளுக்குப் பொருள் விளக்கம் தெரியாமலே மக்கள் பழமொழிகளைப் பேசிவருகின்றனர். ஆனால் சில மக்கள் பழமொழியைத் தவறாக புரிந்துகொள்வார்கள். எனவே ஒவ்வொரு பழமொழியையும் பேசும் முன் அதற்குப் பொருள் தெரிந்துகொண்டு அதன்பின்னரே அந்த சொல்லைப் பேச வேண்டும்.

1 /9

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். பொருள்: மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். ஆனால் இதன் உண்மையான பொருள்: ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியைப் பாசத்துடன் ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் இருக்கும்  உன் குழந்தையும் ஆரோக்கியமாகத் தானாக வளரும் என்பதே உண்மையான பொருள்.

2 /9

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.பொருள்: கழுதைக்குக் கற்பூர வாசம் தெரியாது. ஆனால் இதன் உண்மையான பொருள்: 'கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை' கழு என்பது ஒரு வகை கோரைப்பல். அதில் பாய் தைத்துப் படுத்துப் பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

3 /9

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல: மக்கள் இதனை புரிந்துகொண்ட பொருள்: அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனைக் கைவிட்டது போல. ஆனால் இதன் உண்மையான பொருள்: அரசினை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனைக் கவனிக்காமல் வெறும் அரச மரத்தைச் சுற்றுவது பயன் தராது.  

4 /9

வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம். பொருள்: அழகாக, அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி  நடந்தால் இப்படிச் சொல்லுவார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள்: கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.

5 /9

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். மக்கள் புரிந்துகொண்ட பொருள்: ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்குச் செய்யத் திருமணம், சீர் போன்றவற்றைச் செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான். ஆனால் உண்மையான பொருள்: கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.  

6 /9

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! மக்கள் இதனைப் புரிந்துகொண்ட பொருள்: மணமான பின், பதினாறு குழந்தைகளைப் பெற்று வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசீர்வாதம் செய்வார்கள். இதன் உண்மையான பொருள்:வாழ்க்கையில் 16 வகையான செல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம்,ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள் (ஆயுள்), எடுத்த காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள் என்று பொருள்

7 /9

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே! மக்கள் புரிந்துகொண்ட பொருள்: நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது. ஆனால் இதன் உண்மையான பொருள்: நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.cமக்கள் புரிந்துகொண்ட பொருள்: நன்மை நடப்பதும், தீமை நடப்பதும்  பெண்கள்  கையில் தான் இருக்கிறது. ஆனால் இதன் உண்மையான பொருள்: நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

8 /9

வீட்டுக்கு வீடு வாசற்படி  !! மக்கள் இதனை மக்கள் புரிந்துகொண்ட பொருள்: ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும். இதன் உண்மையான பொருள்: மேன்மையான வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மிகம் என்னும்  வீடு தான் வாசற்படி என்பதே சரியான பொருள்.

9 /9

கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!! மக்கள் இதனைப் புரிந்துகொண்ட பொருள்:நாயைப் பார்க்கும் போதெல்லாம் அதை அடிக்க கல் அகப்படுவதில்லை; அதுபோல கல்லைக் காணும் போதும் அடிவாங்க நாய் சிக்குவதில்லை. ஆனால் இதன் உண்மையான பொருள்: கோவிலில் கால பைரவர் சன்னதியில் நாயின் சிலை செதுக்கப்பட்டிருக்கும். அதைக் கலை கண்ணொடு பார்த்தால், நாய் போலத் தெரியும்; வெறும் கல் என நினைத்தால், நாய்  தெரியாமல் கல் தான் தெரியும். எந்த ஒரு செயலும் தெரிவது/செய்வது, அவரவர் பார்வையில்/செயலில் தான் உள்ளது.