Red Fort வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாதாளத்தில் இருந்தாலும் தேடி பிடிப்போம்: Delhi Police

மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களை வாபஸ் பெற விவசாயிகள் அமைப்புகளின் கோரிக்கைக்கு ஆதரவாக ஜனவரி 26 அன்று விவசாயிகள் ஒரு டிராக்டரை அணிவகுப்பை நடத்தினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 10:31 AM IST
  • ஜனவரி 26 அன்று, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பில் வன்முறை வெடித்தது.
  • தீப் சித்து உட்பட பல குற்றவாளிகளை காவல் துறை கைது செய்து விட்டனர்.
  • மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
Red Fort வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாதாளத்தில் இருந்தாலும் தேடி பிடிப்போம்: Delhi Police title=

புதுடில்லி: ஜனவரி 26 அன்று, விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது, ​​பலர் செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு மதக் கொடியை ஏற்றினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலீஸ் ரேடாரில் இன்னும் பல குற்றவாளிகள் உள்ளனர். இப்போது 200 குற்றவாளிகளின் படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

விரைவில் அடையாளம் காணப்படும்

குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது செங்கோட்டை வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200 பேரின் புகைப்படங்களை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ளனர். வீடியோவை ஸ்கேன் செய்து குற்றவாளிகளின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், 'நாங்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம், அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியுள்ளது.' என்றார்.

குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது வன்முறை மற்றும் குழப்பத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீஸ் குற்றப்பிரிவால் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளி தீப் சித்து (Deep Sidhu) ஏற்கனவே கைது செய்யப்படு விட்டார்.

இரண்டாவது முக்கிய குற்றவாளியான லக்கா சித்தானாவை இன்னும் காவல்துறையினர் பிடிக்கவில்லை. காவல் துறை தீப் சித்து மற்றும் மற்றொரு குற்றவாளியான இக்பால் சிங் ஆகியோரை செங்கோட்டைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியது.

ALSO READ: டிராக்டர் பேரணி: ITO அருகே விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்!

இதுவரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

தில்லி போலிஸ் (Delhi Police) சித்து, ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங் மற்றும் குர்ஜாந்த் சிங் ஆகியோர் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தது.  போராட்டக்காரர்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட புட்டா சிங், சுக்தேவ் சிங், ஜஜ்பீர் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோர் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் அளிக்கப்படும் என கூறப்பட்டது. இவர்களில், சித்து, இக்பால் சிங், சுக்தேவ் சிங் உட்பட சுமார் 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை கைது செய்ய சோதனைகள் நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ராடாரில் குற்றவாளிகள்

மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களை (Farm Laws) வாபஸ் பெற விவசாயிகள் அமைப்புகளின் கோரிக்கைக்கு ஆதரவாக ஜனவரி 26 அன்று விவசாயிகள் ஒரு டிராக்டரை அணிவகுப்பை நடத்தினர். அந்த நேரத்தில் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதக் கொடி ஒன்று செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.

வன்முறையில் 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்தனர். போராட்டக்காரர்களில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் இதுவரை பலரை கைது செய்துள்ளனர். மற்றவர்கள் பாதாளத்தில் மறைந்திருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடிப்போம் என காவல் துறை தெரிவித்துள்ளது.

ALSO READ: Greta Thunberg toolkit case: பெங்களூருவின் 21 வது சுற்றுசூழல் ஆர்வலர் கைது..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News