தனியாக வசித்த பெண்... பெட்ரூமிலும், பாத்ரூமிலும் ரகசிய கேமரா - ஹவுஸ் ஓனர் மகனின் வக்கிர செயல்!

National Latest Crime News: டெல்லியில் தனியாக வசித்த பெண்ணின் வாடகை வீட்டில் கேமராக்களை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 24, 2024, 09:34 PM IST
  • விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை அந்த நபர் கூறியுள்ளார்.
  • மேலும் குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டார்.
  • வீட்டில் 2 கேமராக்களை மறைத்துவைத்துள்ளார், ஒரு கேமராவை அவரிடம் வைத்துள்ளார்.
தனியாக வசித்த பெண்... பெட்ரூமிலும், பாத்ரூமிலும் ரகசிய கேமரா - ஹவுஸ் ஓனர் மகனின் வக்கிர செயல்! title=

National Latest Crime News: டெல்லி மக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கிழக்கு டெல்லி பகுதியில் பெண் ஒருவர் வசிக்கும் வாடகை வீட்டில் கேமராவை மறைத்துவைத்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். குடிமைப்பணி தேர்வுக்கு பயின்று வரும் அந்த பெண் அவரது வாட்ஸ்அப் கணக்கில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடு நடப்பதை அறிந்து அவரது வீட்டை ஆய்வுசெய்த போது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

கிழக்கு டெல்லியில் அந்த பெண் வசித்த வீட்டின் படுக்கையறை, குளியலறை, கழிவறை ஆகியவற்றில் கேமராக்களை பதுக்கிவைத்ததாக கூறி 30 வயதான அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கரண் என்ற அந்த நபர் மாற்றுத்திறனாளி என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. போலீசார் கைதுக்கு பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிக்கர தகவல்களை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊருக்குச் சென்ற சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்து இந்த கேமராக்களை பொருத்தியதாக கைதான நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த பெண்

குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகி வருவதால் வாடகை வீட்டில்  அந்த பெண் சில மாதங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். எப்போதும் அந்த பெண் வெளியூருக்கு செல்லும்போதெல்லாம் வீட்டின் உரிமையாளரின் மகனான கரணை நம்பி, வீட்டின் சாவியை கொடுத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. அந்த பெண் இந்த கொடூரத்தை கண்டறிந்து தனிக்கதை எனலாம்.

மேலும் படிக்க | Siddaramaiah Setback | அடுத்த கர்நாடக முதல்வர் யார்? சித்தராமையாவுக்கு வந்த சிக்கல்.. பாஜக ஹேப்பி

பாதிக்கப்பட்ட பெண் தனது வாட்ஸ்அப் செயலியில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகளை கண்டுள்ளார். இதுகுறித்து கிழக்கு டெல்லியின் துணை காவல் ஆணையர் அபூர்வா குப்தா கூறுகையில்,"வாட்ஸ்அப்பில் இணைக்கப்பட்ட சாதனங்கள் (Linked Devices)  ஆப்ஷனை பார்த்தபோது, அவரது வாட்ஸ்அப் அடையாளம் தெரியாத ஒரு லேப்டாப்பில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார். உடனே அந்த லேப்டாப்பில் இருந்து லாக்-அவுட் செய்துவிட்டார்" என்றார்.

வீடு முழுவதும் சோதனை

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தான் ஏதோ வலையில் சிக்கியிருப்பதாக சந்தேகம் அதிகமாகி உள்ளது. எனவே உடனே அந்த பெண் தனது வீட்டை சல்லடைப் போட்டு தேடியுள்ளார். ஏதும் மறைக்கப்பட்ட சாதனங்கள் இருக்கிறதா என்பதை பார்க்க வீடு முழுவதும் அலசி ஆராய்ந்துள்ளார். அப்போது அந்த பெண் வசிக்கும் வீட்டின் பாத்ரூமில் உள்ள பல்ப் ஹோல்டரில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அந்த பெண் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசாருக்கு நேற்று உடனே தகவல் கொடுத்தார். 

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர். அப்போது, அந்த வீட்டின் படுக்கையறையில் இருந்த பல்ப் ஹோல்டரிலும் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணையில் கரண் இவை அனைத்தையும் ஒப்புகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மூன்று கேமராக்கள்

உள்ளூரில் கிடைத்த எலெக்ட்ரானிக் சந்தையில் இருந்து மூன்று உளவு கேமராக்களையை வாங்கி ஒன்றை பாத்ரூமிலும், ஒன்றை பெட்ரூமிலும் வைத்ததாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த கேமராக்கள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை. காட்சிகள் அனைத்தும் அந்த கேமராவில் உள்ள மெமரி கார்டுகளில் மட்டுமே பதிவாகி உள்ளன. எனவே, அந்த மெமரி கார்டுகளை எடுக்கவும் அடிக்கடி கரண் அந்த வீட்டுக்குள் வந்துள்ளார். 

அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எலெக்ட்ரிக்கல் வேலைகள் இருக்கிறது, ஃபேனை பழுது பார்க்க வேண்டும் என பலமுறை வீட்டு சாவியை கேட்டு வாங்கி, அந்த பெண் இல்லாத நேரத்தில் வீட்டுக்குச் சென்று மெமரி கார்டுகளை கைப்பற்றி வந்துள்ளார். இந்த மெமரி கார்டுகளில் பதிவானவற்றை தனது தனிப்பட்ட லேப்டாப்புக்கு கரணம் மாற்றியிருக்கிறது. மேலும், கரண் வாங்கிய மூன்றாவது கேமரா இன்னும் அவரிடம் இருப்பதையும் போலீசார் உறுதிசெய்து அதை கைப்பற்றினர். கரணின் இரண்டு லேப்டாப்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | புதிய உச்சத்தில் சென்செக்ஸ் 85,000 புள்ளிகளை கடந்தது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News