அஸ்ஸாம் குவஹாட்டியில், 1971ம் ஆண்டில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தனது உரையில், இந்தியா தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் எனவும், நாட்டுக்கு எதிராக எல்லைக்கு அப்பால் நடக்கும் சதியை முறியடிக்க எல்லை தாண்ட இந்தியா ஒரு போதும் தயங்காது என எச்சரிக்கை விடுத்தார்.
"வங்கதேசம் நட்பு நாடு என்பதால் மேற்கு எல்லையை போன்று கிழக்கு எல்லையில் பதற்றம் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் மேற்கு எல்லைகளுடன் ஒப்பிடும் போது, கிழக்கு எல்லைப் பகுதிகளில் தற்போது, அதிக அமைதி நிலவுகிறது என்றார். மேலும் அங்கு ஊடுருவல் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது இங்கு அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுகிறது என்றார்.
சமீபத்தில், வடகிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகார சட்டம் (AFSPA)வாபஸ் பெறப்பட்ட தொடர்பாக குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிலைமை சீரடைந்தால் மத்திய அரசு சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற்றது என்றார்.
மேலும் படிக்க | பாஜகவிடம் நல்ல விஷயங்களும் உள்ளன...காங்கிரசிற்கு அதிர்ச்சி அளித்த ஹர்திக் படேல்
"நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அருணாச்சலப் பிரதேசம் (பெரும்பாலான பகுதிகள்) மற்றும் மேகாலயாவில் இருந்து AFSPA சட்டம் நீக்கப்பட்டது. இப்போது உள்துறை அமைச்சராக அமித்ஷா உள்ள நிலையில், அசாமின் 23 மாவட்டங்கள் மற்றும் மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் உள்ள தலா 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து AFSPA திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க ராணுவம் விரும்பவில்லை என்ற தவறான தகவல் பரப்பப்படுவதால், மக்களிடம் இது குறித்த தவறான கருத்து உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலைமைதான் காரணம், ராணுவம் அல்ல என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சீனாவுடனான சமீபத்திய மோதலில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்திய வீரத்தைப் பாராட்டிய அவர், "உலகில் உள்ள எந்த சக்தியும் பாரத மாதாவை தலை வணங்க செய்ய இயலாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.
மேலும், பாதுகாப்புத் தயார்நிலைக்குத் தேவையான வலுவான எல்லை உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ளும் எல்லைச் சாலை அமைப்பிற்கு (BRO) பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் படிக்க | 34 லட்சம் பயனாளிகளுக்கு 3628 கோடி ரூபாய் கடன் வழங்கிய பிரதமர் ஸ்வநிதி திட்டம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR