வறுமையில் இருக்கும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்....
வறுமையில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு தற்போது வழங்கப்படும் 200 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 800 ரூபாயாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 80 வயதுக்கு அதிகமானோருக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை, ஆயிரத்து 200 ரூபாயாக அதிகரித்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தற்போது நிதி அமைச்சகத்தின் ஆலோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில், ஓய்வூதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.