தாயை நிர்வாணப்படுத்தி, மகனை அடித்தே கொன்ற கொடூர கும்பல்! மத்தியப் பிரதேச கொடுமை

Madhya Pradesh Dalit attack: மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல், அவரது தாயை நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமை செய்த கொடூரம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 28, 2023, 12:07 PM IST
  • பட்டியலின இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்
  • இளைஞரின் தாயை நிர்வாணப்படுத்தி அடித்த கொடூரர்கள்
  • வழக்கை திரும்பப் பெற மறுத்ததற்காக கொடுமை செய்த ஆண்கள்
தாயை நிர்வாணப்படுத்தி, மகனை அடித்தே கொன்ற கொடூர கும்பல்! மத்தியப் பிரதேச கொடுமை title=

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தலித் குடும்பத்தினருக்கு எதிரான தொடர் வன்முறைகள் நாட்டையே அதிரச் செய்துள்ளது. வழக்கை திரும்ப பெற மறுத்த தலித் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த கும்பல், தற்போது நடு ரோட்டில் வைத்து பட்டியலின இளைஞரை அடித்துக் கொன்று, ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. மகனை அடிப்பதை தடுக்க வந்த தாயையும் நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

சம்பவத்தை அடுத்து கணிசமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, அந்தப் பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், சாதிய மோதல்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வன்முறை கும்பல் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் குடியிருப்பையும் நாசப்படுத்தி நாசம் செய்துள்ளது.

தொடர் கொடுமைகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டின் உறுதியான கூரைகளைக் கூட உடைத்து கொடூரமான வன்முறையை கும்பல் அரங்கேற்றியுள்ளது.

வழக்கை திரும்ப பெறுத்த குடும்பம்

மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின். நிதினின் சகோதரியை விக்ரம் சிங் என்பவர் 2019ம் ஆண்டு பாலியல் சித்ரவதை வன்கொடுமை செய்தார். நிதினின் சகோதரி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறையில் புகார் செய்திருந்தார்.

ஆனால், இந்த வழக்கை திரும்பப் பெறும்படி நிதினின் சகோதரியிடம் நிர்பந்தம் கொடுத்த விக்ரம் சிங்கை சேர்ந்தவர்கள், நிதினின் குடும்பத்தினரிடமும் நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆனால் வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதில் குடும்பத்தினர் உறுதியாக இருந்தார்கள்.

மேலும் படிக்க | உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பா? குஜராத் நீதிமன்றத்தை கண்டித்த நீதிபதிகள்

சம்பவத்தன்று என்ன நடந்தது?

அதன் தொடர்ச்சியாக, சம்பவம் நடைபெற்ற அன்று, விக்ரம் சிங்குடன் நிதினின் வீட்டிற்கு சென்ற கோமல் சிங், ஆசாத் சிங் அனைவரும், வீட்டிலிருந்த நிதின் சகோதரி மற்றும் அவரது அம்மாவிடம் வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக பேசியிருக்கின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் மறுத்ததும், வீட்டை அடித்து உடைத்திருக்கின்றனர்.

நிதின் கொலை

வீட்டை அடித்து உடைத்த கும்பல், நிதினை தேடிச் சென்றார்கள். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த நிதினையும் மிரட்டினார்கள். வழக்கை வாபஸ் பெற முடியாது என்று சொன்ன நிதினை அடித்து துவைத்தார்கள். மகனைத் தேடி கொண்டு வந்த நிதினின் தாயார் மற்றும் சகோதரி, நிதினை அடிப்பதைத் தடுக்க முயன்றனர்.

தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்த கும்பல்

அதனால் கோபமடைந்த கும்பல், நிதின் தாயாரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்தனர். அடி வாங்கியதில் படுகாயமடைந்த நிதின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனலிக்காமல் இறந்துவிட்டார். இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், முக்கிய குற்றவாளி விக்ரம் சிங் உட்பட 8 பேரைக் கைதுசெய்துள்ளனர்.

போராட்டத்தில் இறங்கிய பாதிக்கப்பட்டவர்கள்

அரசு இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று போலீசார் உறுதியளித்தனர், மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளது.தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, மகனின் இறுதிச்சடங்குகளை செய்யமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்த பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சமாதானப்படுத்திய போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, நிதினின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | இஸ்லாமிய மாணவனின் கன்னத்தில் அறைந்த மாணவர்கள்... கட்டளையிட்ட ஆசிரியை - வீடியோவால் சர்ச்சை

வன்கொடுமை புகார்

2019 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்டவரின் சகோதரியை வன்கொடுமை செய்த நான்கு ஆண்கள் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நால்வரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தின் முன் உள்ளது என்பதை  காவல்துறை உறுதி செய்துள்ளது.

இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரசியல் சர்ச்சையை கிளப்பியது, குறிப்பாக வரவிருக்கும் தேர்தல் சூழலில். காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசை விமர்சித்தன. இதற்கு பதில் அளித்த ஆளும் கட்சி, விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றச் சம்பவங்கள் தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலைப்பாட்டை காங்கிரஸ் கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டியது.

மத்தியப் பிரதேசத்தில் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான ஒடுக்குமுறைக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்தார். தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் மாநிலத்தில் அதிக அளவில் நடப்பதாக குற்றம் சாட்டிய அவர், தலித்களுக்கு எதிராக செயல்படும் சூழலை பாஜக வளர்த்து வருவதாக குற்றம் சாட்டினார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக வலியுறுத்தினார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மத்தியப் பிரதேச அமைச்சர் பூபேந்திர சிங், அதை மறுத்தார்.

மேலும் படிக்க | டெக்னாலஜியை யூஸ் பண்ணுங்க... வழக்கறிஞர்களை அறிவுறுத்திய தலைமை நீதிபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News