Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்

நாட்டின் கிழக்குப் பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் யாஸ் (Yaas) சூறாவளி தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 25, 2021, 07:50 AM IST
  • Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது
  • மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Cyclone Yaas: மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது, மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம் title=

நாட்டின் கிழக்குப் பகுதியை யாஸ் (Yaas) சூறாவளி நெருங்கிக்கொண்டிருக்கிறது. புயல் தாக்கத்தால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனையடுத்து, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  

நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசாங்கம், மேற்கு வங்காளத்தின் எல்லையிலுள்ள பாலசூர் மாவட்டத்திற்கு ஒரு பெரிய மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது.

"ஏற்கனவே COVID19 என்ற பேரிடரை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், யாஸ் சூறாவளி வடிவத்தில் எங்களுக்கு மற்றுமொரு சவாலை கொடுத்துள்ளது. மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு தான் தற்போது முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, சூறாவளியால் பாதிப்புக்குள்ளாகும் அனைவருக்கும் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, பாலசோர், பத்ராக், கேந்திரபாரா மற்றும் ஜகஸ்திங்க்பூர் மாவட்டங்களும் அதிக அளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ALSO READ | Cyclone Yaas: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறாவளியை எதிர்கொள்ள தயாராகும் இந்திய ராணுவம்

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் அரை மில்லியன் மக்களை வெளியேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

யாஸ் சூறாவளி நிலத்தை கடக்கும்போது அதன் வேகம் மணிக்குச் சுமார் 165 முதல் 185 கிலோமீட்டர் வரை இருக்கலாம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த சூறாவளிப் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 2 முதல் 4.5 மீட்டர் வரை கடலில் அலைகள் உயரலாம் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Also Read | PUDUCHERRY: தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன MLAக்கள் 26ஆம் தேதி பதவியேற்பு

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையை வரும் 29ந்தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

அசாம், மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களும் 'யாஸ்' புயலால் பாதிக்கப்படக்கூடும். அங்கு மே 26 மற்றும் 27 தேதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யலாம்.

இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் அடிக்கடி கடுமையான புயல் வீசுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம் கடல் வெப்பம் அதிகரித்தாக இருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Also Read | PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News