புது டெல்லி: பொது முடக்கம் காரணமாக கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா வெற்றிகரமாக உள்ளது. ஆனால் கடந்த ஏழு நாட்களில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை பாதிப்பு கவலைகளை எழுப்பியுள்ளன. நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தொற்று ஏழு நாட்களில் பதிவாகியுள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் எண்ணிக்கை லாக் டவுன் 4.0 காலத்தில் அளிக்கப்பட்ட சலுகைகளை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஒரு வாரமாக சராசரியாக நான்கு முதல் ஐந்தாயிரம் நோயாளிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
தப்லிகி ஜமாஅத்தில் இருந்து தொற்றுநோய்க்கான முதல் பாதிப்பு மார்ச் 17 அன்று தெரிவிக்கப்பட்டது. இது ஏப்ரல் 19 க்குள் தப்லிகி ஜமாஅத் தொடர்பாக 23 மாநிலங்களில் தொற்று பரவியது. ஏப்ரல் 19 நிலவரப்படி, நாட்டில் முப்பது சதவீதம் நோயாளிகள் தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள். இப்போது நாட்டில் வீடு திரும்பிய சுமார் நான்காயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் உ.பி.யில் 1230 பேரும், பீகாரில் 788 பேரும் உள்ளனர். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து சுமார் 13 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது:
22 மே -6088
21 மே -5609
20 மே -5729
19 மே -4860
18 மே -5242
17 மே -4987
16 மே -3970
5 மாநிலங்களில் ஏழு நாட்களுக்கு 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு:
மகாராஷ்டிராவில், ஏழு நாட்களில் 12542 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மே 16 அன்று மாநிலத்தில் 29,100 தொற்று பாதிப்பு இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை மே 22 அன்று 41642 ஆக அதிகரித்தது. குஜராத் பற்றி பேசுகையில், ஏழு நாட்களில் இங்கு 2974 புதிய தொற்று பதிவாகியுள்ளன. மே 16 அன்று 9931 ஆக இருந்த தொற்று மே 22 அன்று 12905 ஆக அதிகரித்தன. ஏழு நாட்களில் 3859 பேர் புதிதாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டனர். அதாவது மே 16 அன்று 10,108 தொற்று இருந்த நிலையில், இப்போது மாநிலத்தில் எண்ணிக்கை 13967 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், டெல்லியில் 2764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 16 அன்று 8,895 ஆக இருந்த பாதிப்பு, மே 22 அன்று, எண்ணிக்கை 11659 ஆக அதிகரித்தது. கடந்த ஒரு வாரத்தில் மத்திய பிரதேசத்தில் 1422 கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. அதாவதுமே 16 அன்று 4559 பேருக்கு என இருந்தன. இது மே 22 அன்று 5981 ஆக அதிகரித்தது.