சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "மதிப்பிற்குறிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நான் எழுதிய கடிதம், பாரத ரத்னாவை இந்திய போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு வழங்குமாறு முறையாக கேட்டுக்கொண்டது தொடர்பாக." என குறிப்பிட்டுள்ளார்.
My letter to H’onble Prime Minister @narendramodi formally requesting him to accord Bharat Ratna to Shaheed-E-Azam’s Bhagat Singh, Rajguru & Sukhdev.Formally Confer the honorific of Shaheed-E-Azam on them & dedicate Chandigarh Airport located in Mohali in memory of Bhagat Singhji pic.twitter.com/PfqduZq8oi
— Manish Tewari (@ManishTewari) October 26, 2019
அக்டோபர் 25 தேதியிட்டு, பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில்,.. "இந்திய போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பில், மார்ச் 23, 1931 அன்று உச்ச தியாகம் செய்தனர்"
நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த இந்த போர் வீரர்களுக்கு நாட்டின் உயரிய மரியாதையினை மத்திய அரசு அளித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வரும் ஜனவரி 26-ஆம் நாள், குடியரசு தினத்தன்று பாரத ரத்னா சுதந்திர போராளிகளின் புகழ்பெற்ற மூவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.
அதேப்போன்று மொஹாலியில் உள்ள சண்டிகர் விமான நிலையத்தை பகத் சிங் விமான நிலையமாக மறுபெயரிடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சைகை "124 கோடி இந்தியர்களின் இதயங்களையும் ஆன்மாவையும் தொடும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோருக்கு பாரத ரத்னாவை வழங்கவேண்டும் என AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தியிருந்தார்.
பகத்சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவரம் ராஜ்குரு ஆகியோர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மூன்று புரட்சிகர நாயகன்கள் ஆவர்., ஜான் சாண்டர்ஸ் படுகொலையில் ஈடுபட்டதாக பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க புரட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சிங் பெரும்பாலும் ஷாகித் பகத்சிங் என்று அழைக்கப்படுகிறார், இந்தி மொழியில் "தியாகி" என்று பொருள்படும் "ஷாகித்" என்ற சொல் பகத்சிங்கிற்கு உரிதான ஒரு அடைமொழியாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதினை நாடு அளித்திட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.