அமைச்சர்கள் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தவும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) அமைச்சரவை நேற்று முன் தினம் விரிவாக்கப்பட்டது. பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 9, 2021, 09:10 AM IST
அமைச்சர்கள் தேவையற்ற கருத்துக்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்தவும்: பிரதமர் மோடி  title=

பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) அமைச்சரவை நேற்று முன் தினம் விரிவாக்கப்பட்டது. பல துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதன்கிழமை 36 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றனர். 

இந்நிலையில், தங்களது சீனியர் அமைச்சர்களை சந்தித்து அவர்களது அனுபவங்களை கேட்டறிந்து, அவர்களது அறிவுரையை பெற்று, முழு முனைப்புடன் அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளது. 

புதிய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைந்து,  தங்கள் திறன் முழுவதையும் பணிகளில் செலுத்துவதோடு, மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர்  புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர்களிடம் கூறினார்.

ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,  தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதையும் அமைச்சர்கள்  தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) புதிய அமைச்சர்களிடம்  அறிவுரை கூறுனார்

ALSO READ: மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

அமைச்சரவை விரிவாக்கப்பட்டதைத் (Cabinet Expansion) தொடர்ந்து, பல அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பலரது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன. மன்சுக் மாண்டவியாவுக்கு சுகாதார அமைச்சகம் மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கிரேன் ரிஜிஜுக்கு சட்ட அமைச்சகத்தின் பொறுப்பும், தர்மேந்திர பிரதானுக்கு கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சக பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை (L Murugan) மீன், கால்நடைத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறைகளின் இணை அமைச்சராக நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ALSO READ: தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் இணை அமைச்சராக எல். முருகன் நியமனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News