ஹிமாச்சலப் பிரதேச பேரழிவு, பியாஸ் நதியின் பெருஞ்சீற்றத்தினால் 60க்கும் மேற்பட்டோர் பலி

Himachal Pradesh disaster: இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கைப் பேரிடரின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2023, 01:50 PM IST
  • ஹிமாச்சலப் பிரதேசத்தில் மழைவெள்ளப் பேரழிவு
  • ப்யாஸ் நதியின் கோபச் சீற்றம்
  • வட மாநிலங்களை வாட்டி வதைக்கும் பெருமழை
ஹிமாச்சலப் பிரதேச பேரழிவு, பியாஸ் நதியின் பெருஞ்சீற்றத்தினால் 60க்கும் மேற்பட்டோர் பலி title=

நொய்டா: ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பேரழிவு ஏற்படுத்திய வெள்ளத்தில், பியாஸ் நதியைச் சுற்றியப் பகுதிகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. சொர்க்கபூமி, தேவ பூமி என்று அழைக்கப்படும் ஹிமாச்சல் பிரதேசம், நாட்டின் விருப்பமான விடுமுறை தலமாகவும் திகழ்கிறது. அங்கு, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சோகம் நடக்கப் போகிறது என்பது அதிர்ச்சிதரும் தகவலாக இருக்கிறது. 2013ல் உத்தரகாண்டில் உக்ர தாண்டவம் நடத்திய பேரழிவை நினைவூட்டும் வகையில், தற்போதைய வெள்ளம் இருக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

நாட்டில் பெய்து வரும் பெரும் மழையில் ஏற்பட்டுள்ள பெரும்பாலான பேரழிவுகள், பியாஸ் நதியைச் சுற்றி நடந்தன: நாட்டின் பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் பியாஸ் மற்றும் யமுனை நதிகள் பாயும் இடங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளமும், சூறைக் காற்றும், மலைப்பாங்கான மாநிலத்தில், உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கைப் பேரிடரின் அடுத்த அத்தியாயம் தொடங்கிவிட்டது போல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மிக முக்கியமான சில பகுதிகளில், பியாஸ் ஆற்றின் அருகே அமைந்துள்ள மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள குலு மற்றும் மணாலியில் கடுமையான பேரழிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிம்லாவுக்கு அருகில் மேகவெடிப்பு! கனமழைக்கு 7 பேர் பலி! மாநில அரசு எச்சரிக்கை

இமாச்சலில் இயற்கை அழிவு

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ரயில் பாதைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. அடுத்த 24-48 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மண்டியில் இருந்து மணலி செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் மூடப்பட்டுள்ளது.

சாலைகளின் சில பகுதிகள் உடைந்துள்ளன. அதிவேகமாக பாயும் தண்ணீர், கடந்த 72 மணி நேரத்தில் பல இடங்களில் பாலங்கள், கட்டிடங்கள், வாகனங்களை அடித்து சென்றுவிட்டது. கடந்த சில நாட்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இமாச்சல மாநில அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மாநிலத்தில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேகம் வெடிப்பு நிகழ்ந்துள்ளது, 24 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை

825 சாலைகள் சேதமடைந்துள்ளன, 4000க்கும் மேற்பட்ட மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன, அதேபோல் நூற்றுக்கணக்கான குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன.

 கனமழையால் மலைகள் சிதிலமடைந்து வருகின்றன. மலைகளில் இருந்து தண்ணீருடன் குப்பைகளும் அடித்துக் கொண்டு வருகின்றன. தண்ணீருடன் வரும் பாறையின் இடிபாடுகள் மோதுவதால், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நெடுஞ்சாலைகள் உடைந்து கிடக்கின்றன. கடந்த சில நாட்களாக சிம்லா-கல்கா நெடுஞ்சாலை மீண்டும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.

பியாஸ் நதிக்கரையில் ஏன் அதிக அழிவு ஏற்பட்டது?

பியாஸ் ஆற்றில் இதுபோன்ற தண்ணீரை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று மண்டியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். பியாஸ் நதியில் இதுவரை வெள்ளம் ஏற்பட்ட போதெல்லாம் ஏற்படுத்திய சேதங்களைவிட, இந்த ஆண்டும் மேலும் அதிக சேதம் ஏற்பட்டு புதிய சாதனையை ஏற்படுத்தியிருப்பது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நிரம்பி வழியும் ஆறுகள், குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பியாஸ் நதியில் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுக்குக் காரணம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். வளர்ச்சிப் பணிகளுக்காக மலைகளில் வெடிகுண்டு வெடிப்பதும், மலைப்பாதைகளில் கட்டுமானப் பணிகளுக்காக மிக அதிக அளவில் வாகனங்களை இயக்குவதும் சரியல்ல என கருதுகின்றனர்.

மலைகளில் நெடுஞ்சாலை அமைப்பது மற்றும் ஹைட்ரோ திட்டத்திற்கு சுரங்கம் தோண்டுவது என வலுவான மலைகள் உடைக்கப்பட்டு, வலுவிழக்கச் செய்யபப்டுவதால், அவை தங்கள் இயல்பு நிலையை இழந்து, நெகிழ்வதால், பாறைக்கற்கள் பெயர்ந்து வருகின்றன. பாதுகாப்பற்ற கட்டுமானங்கள் எல்லா இடங்களிலும் நடக்கிறது. கட்டுமானப் பணிகளின் கழிவுகள் ஆறுகளை அடைகின்றன.

பியாஸ் நதி பள்ளத்தாக்கில் கூட, கட்டுமானப் பணிகள் ஆற்றின் மிக அருகில் செய்யப்படும் நிலையில், இமயமலையில் அமைந்திருக்கும் நதியில் திடீர் மழை வெள்ளத்தினால் சேதம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. பியாஸில் அதிவேகமாக வந்த தண்ணீர் அதன் போக்கை மாற்றி மணலிக்கும் மண்டிக்கும் இடையே ஏராளமான வீடுகள், வாகனங்கள், விலங்குகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகள் அடித்துச் சென்றுவிட்டது.  

பியாஸ் ஆறு ஹிமாச்சலில் பாயும் ஒரு பெரிய நதி. இது குலுவில் உள்ள வியாஸ் குண்டில் இருந்து உருவானது. இது குலு, மண்டி, ஹமிர்பூர் மற்றும் காங்க்ரா வழியாக பாய்கிறது. இதனால்தான் பியாஸ் நதியைச் சுற்றி அதிக பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன.

'பியாஸ்' நதியின் பெயர் சமஸ்கிருதப் பெயரான 'விபாஷா' என்பதிலிருந்து பெறப்பட்டது.. பியாஸ் ஆறு ஹிமாச்சலப் பிரதேசத்தின் ரோஹ்தாங் கணவாயில் 14,308 அடி உயரத்தில் இருந்து பாய்கிறது, அங்கிருந்து குலு பள்ளத்தாக்கு வழியாக தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த நதி கபுர்தலாவில் பஞ்சாபில் நுழைந்து தெற்கே திரும்பி ஹரிகே என்ற இடத்தில் சட்லஜ் ஆற்றில் கலக்கிறது.

மேலும் படிக்க | வானிலை முன்னறிவிப்பு... ‘இந்த’ மாநிலங்களில் மழை - வெள்ளத்தினால் பேரழிவு..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News