டோக்லாம் பகுதியில் சீனா அமைதியாக தன் பணியை தொடர்கிறது -அமெரிக்கா

டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான் மற்றும் இந்தியா தடுக்க முற்பட வில்லை என அமெரிக்க அதிகாரி கூறியுள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 26, 2018, 05:57 PM IST
டோக்லாம் பகுதியில் சீனா அமைதியாக தன் பணியை தொடர்கிறது -அமெரிக்கா title=

இந்திய - சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளை தங்களுடையது என்று கூறி, சிலவற்றின் பெயர்களையும் மாற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது நமது அண்டை நாடான சீனா.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா - சீனா - பூட்டான் நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தம் என்று கூறி சீனா படைகள் ஆக்கிரமிப்பு செய்து சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டது. இதனை தடுத்தது இந்தியா, அங்கு நமது ராணுவ படைகளை குவித்தது. இதனால் சீனாவும் அந்த பகுதியில் படைகளை குவித்தது. இதனால் டோக்லாம் பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக இந்திய ராணுவத்தை திரும்ப பெறுமாறும், இல்லையென்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா எச்சரித்தது. ஆனால் இந்தியா, டோக்லாம் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியது. 

இதனால் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே வாரத்தை போர் ஏற்பட்டது. இந்தியாவின் தரப்பில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். சீனா உடனடியாக தங்கள் படைகளை திரும்ப பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. பின்னர் இருநாடுகளுக்கும் இடையே தூதராக ரீதியாக நடவடிக்கை எடுக்கபட்டு, கூடிய சீக்கிரம் இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்ப பெற்றுக்கொள்ளோம் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அதை பூட்டான் மற்றும் இந்தியா தடுக்க முற்படவில்லை என அமெரிக்க அதிகாரி கூறியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அமெரிக்காவின் பிரதம துணை செயலாளர் அலிஸ் ஜி வெல்ஸ் கூறியது, இந்தியா தனது வட எல்லைகளை பாதுகாப்பதில் தீவிரமாக உள்ளது என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். ஆனால் சீனா இந்திய எல்லையில் சாலை மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இது இந்தியாவிற்கு கவலைக்குரிய விஷயமாகும் என்று கூறியுள்ளார்.

Trending News