மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!!

புதிய விதிகள், மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும்  அதற்கு இணங்கியுள்ளன. ஆனால், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2021, 02:10 PM IST
  • முதன்மை இணக்க அலுவலரின் விவரங்கள் குறித்து ட்விட்டர் இன்னும் தெரிவிக்கவில்லை.
  • ட்விட்டர், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து ‘ப்ளூ டிக்கை’ அகற்றிதற்கு கடும் எதிர்ப்பு உருவானது.
மத்திய அரசு, ட்விட்டருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை; அடுத்தது என்ன..!! title=

சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதையும், இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச விரோத கருத்துக்களை பரப்ப  சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில், சமூக ஊடக தளங்கள் (Social Media) மற்றும் ஓடிடி (OTT) தளங்களுக்கும்  புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) மத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. 

புதிய விதிகள், மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும்  அதற்கு இணங்கியுள்ளன. ஆனால், ட்விட்டர் (Twitter) தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

இந்நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவது தொடர்பாக, மத்திய அரசு சனிக்கிழமை (ஜூன் 5) ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) பகிர்ந்து கொண்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில், புதிய விதிகளின் குறிப்பிட்டுள்ளபடி, முதன்மை இணக்க அலுவலரின் விவரங்கள் குறித்து ட்விட்டர் இன்னும் தெரிவிக்கவில்லை என்று மத்திய குறிப்பிட்டுள்ளது.

“மேலும், ட்விட்டர் (Twitter) பரிந்துரைத்துள்ள, குறை தீர்க்கும் அதிகாரி மற்றும் நோடல் தொடர்பு நபர் இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர் அல்ல. ட்விட்டர் குறிப்பிட்டுள்ளபடி ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலக முகவரி, உண்மையில் இந்தியாவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தின் முகவரி ஆகும். இது  விதிகளுக்கு புறம்பானது ”என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை;  அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன

2000வது ஆண்டின் தகவல் தொழில்நுட்பம் (IT) சட்டத்தின் பிரிவு 79-ன் கீழ்,  ட்விட்டர்  நிறுவனத்திற்கு பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படாது என்பது அதிரடி விளைவுகளை சந்திக்க நேரிடும் என என்று மத்திய அரசு ட்விட்டருக்கு எச்சரிக்கை அளித்துள்ளது.

முன்னதாக,ட்விட்டர் (Twitter), குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து ‘ப்ளூ டிக்கை’ அகற்றிதற்கு கடும் எதிர்ப்பு உருவானது. அதை அடுத்து மீண்டும் ‘ப்ளூ டிக்’ வழங்கபப்ட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக கணக்கு செயலற்றதாக இருந்ததால், கணக்கில் இருக்கு ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவன  கூறியது.

ALSO READ | Twitter புதிய விதிகளுக்கு இணங்கவில்லை என்றால் தடை நிச்சயம்: தில்லி உயர்நீதி மன்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News