CBSE Latest News: சிபிஎஸ்இ திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இதில் இந்த கல்வியாண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு கடத்திலும் சுமார் 50% பாடத்திட்டங்கள் இருக்கும். முதல் கால தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும். இரண்டாம் பருவ தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், 2 ஆம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12 வது வாரியத் தேர்வுகளுக்கான சிபிஎஸ்இ திட்டத்தில், தொடர்ந்து உள் மதிப்பீட்டைச் செய்வதற்கான முயற்சிகள் தொடரும் என்றும் இது மிகவும் நம்பகமானதாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | 12-ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து சிபிஎஸ்இ விளக்கம்
தற்போதைய கொரோனா தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் 2021 ரத்து செய்யப்பட்டுள்ளதால், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தரப்பில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அதாவது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும். 11 ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். 12 ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். அதனுடன் செய்முறைத் தேர்வுக்கு முழு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
10, 11 வகுப்பு தேர்வு எழுதிய ஐந்து தாள்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மூன்றை பரிசீலிக்கப்படும் என்று CBSE தரப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR