#Cauvery Issue: அவமதிப்பு வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணை!

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததை வரும் 9-ம் தேதி விசாரணை செய்யும் என தெரிவித்துள்ளது!

Last Updated : Apr 2, 2018, 10:58 AM IST
#Cauvery Issue: அவமதிப்பு வழக்கு வரும் 9-ம் தேதி விசாரணை!  title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த வாரம் வியாழக்கிழமை முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதாக முடிவு செய்திருந்தனர். 

இதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது. இதை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்., 9-ம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Trending News