UP-ல் BSP-SP கூட்டணியில் 38 தொகுதியில் போட்டி; ஏமாற்றத்தில் காங்.,

எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும் அமித்ஷாவுக்க்ம் தூக்கத்தை கலைக்க போகிறது என மாயாவதி தெரிவித்துள்ளார்......

Last Updated : Jan 12, 2019, 01:03 PM IST
UP-ல் BSP-SP கூட்டணியில் 38 தொகுதியில் போட்டி; ஏமாற்றத்தில் காங்.,  title=

 

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியில்லை என்றும் மாயாவதி கூறினார். 

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும்  ஊழல்கள் பெருகியதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றும் மாயாவதி கூறினார். 

நாட்டின் நலனுக்காக இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறினார்.


எங்களின் இன்றைய அறிவிப்பு மோடிக்கும் அமித்ஷாவுக்க்ம் தூக்கத்தை கலைக்க போகிறது. பிஎஸ்பி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உ.பி.யின் லக்னோவில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு...


நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதியும் அகிலேசும் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்....

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி குறித்து நாளை முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதிக் கட்சியும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சில சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் சமாஜ்வாதிக் கட்சி வெற்றிபெற்றது.

இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இரு கட்சித் தலைவர்களும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க.வை எதிர்த்து வலுவான அணியாக களமிறங்கும், இந்த இரு கட்சிகளும் 25 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி சேர்ந்துள்ளன. இதற்கு முன்பு சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனத் தலைவர் கன்ஷிராமும், பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி வைத்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் முலாயம் - கன்ஷிராம் கூட்டணி  அமோக வெற்றி பெற்றது. 

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் அணி சேருகின்றன. முன்னதாக, காங்கிரஸ் அணியில் இவ்விரு கட்சிகளும் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியை புறக்கணித்துவிட்டு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. 

 

Trending News