உணவு புகார்: பிஎஸ்எப் வீரரின் பேஸ்புக்கை பயன்படுத்துவது யார்?

எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வீடியோ வெளிட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரின் பேஸ்புக் கணக்கை அவரது மனைவி தான் பயன்படுத்தி வருகிறார். 

Last Updated : Jan 11, 2017, 08:59 AM IST
உணவு புகார்: பிஎஸ்எப் வீரரின் பேஸ்புக்கை பயன்படுத்துவது யார்? title=

டெல்லி: எல்லை பாதுகாப்பு படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டி வீடியோ வெளிட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரின் பேஸ்புக் கணக்கை அவரது மனைவி தான் பயன்படுத்தி வருகிறார். 

கடுங்குளிரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் என்பவர் இது குறித்த வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டு பிரதமர் மோடி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இந்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேஜ் பகதூரின் குற்றச்சாட்டை எல்லை பாதுகாப்பு படை மறுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தேஜ் பகதூரின் பேஸ்புக் கணக்கு போலியானது என்ற தகவல் வெளியானது. இதை அறிந்த அவரின் மனைவி தேஜ் பகதூரின் பேஸ்புக் கணக்கை நான் தான் பயன்படுத்துகிறேன் அது போலி இல்லை என பேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

முன்னதாக நேற்று எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தங்களுக்கு ரொட்டியும், டீயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்க செல்வதாகவும் வீடியோ மூலம் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்புப் படையின் 29-வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் எனும் வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், காய்கறிகளோ, தொட்டுக்கொள்ள ஊறுகாயோ வழங்கப்படுவதில்லை, வேக வைத்த பருப்பு மட்டுமே வழங்கப்படுகிறது என புகார் தெரிவித்தார். 

மேலும் எல்லையில் சுமார் 10- 11 மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டே, மோசமான தட்பவெப்ப நிலையில் பணி புரியும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடன் தூங்கச் செல்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Trending News