பஞ்சாபில் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளை பி.எஸ்.எஃப் வீரர்கள் கைது செய்ததுள்ளனர்!!
எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) செவ்வாய்க்கிழமை காலை பஞ்சாபில் இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. போர் நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான், இந்திய எல்லைப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதற்கு தகுந்த வகையில் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், முகமது லத்தீப் மற்றும் முகமது சைஃப் என அடையாளம் காணப்பட்ட இவர்கள் இருவரும் பி.எஸ்.எஃப் அபோஹார் துறைக்கு அருகிலுள்ள எல்லை புறக்காவல் நிலையம் (பிஓபி) சமஸ்கேவிலிருந்து கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் பாகிஸ்தானில் வசிப்பவர்கள். தற்போது, அவர்கள் பி.எஸ்.எஃப் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இவர்களின் முழுமையான தகவலை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.