பா.ஜ.கவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்; பிரதமர் மோடி!!

பா.ஜ.கவின் ஆட்சி மன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று தொடங்கியது.  

Last Updated : Dec 20, 2017, 12:26 PM IST
பா.ஜ.கவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்; பிரதமர் மோடி!! title=

குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில் 182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் கடந்த 1997-98 தேர்தல் முதல் தொடர் வெற்றிப் பெற்றுள்ள பாஜக, தற்போது தனிபெரும்பான்மையோடு வெற்றிப்பெற்று 6 வது முறையாக, தங்களது ஆட்சியை பலமாக ஊன்றி உள்ளது.

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா 99 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இதேபோன்று 68 உறுப்பினர்களை கொண்ட இமாசல பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பிடித்துள்ளது.  இதன் மூலம் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 18-லிருந்து 19 ஆக உயர்ந்துள்ளது.

இதில் குஜராத், இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கார், அருணாசல பிரதேசம், அரியானா ஆகிய 9 மாநிலங்களில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் அரசு அமைத்திருக்கும் நிலையில், அசாம், கோவா, மணிப்பூர், ஜார்கண்ட், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.கவின் ஆட்சி மன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதுடெல்லியில் இன்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில் குஜராத் மற்றும் இமாசல பிரதேசத்தில் தேர்தலில் அடைந்த வெற்றி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Trending News