மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதை அடுத்து, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், "மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.
அதேபோல இன்று காலை முதலே தனது நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளரை விட பின்தங்கியே இருந்தார். ஆனால் மதியத்திற்கு பிறகு, 16 வது சுற்றுக்குப் பிறகு, முன்னிலை பெற்ற மம்தா பானர்ஜி, மீண்டும் பின்னடைவை சந்தித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திருணாமூல் காங்கிரஸ் அதிக பெரும்பான்மையை பெற்று முன்னிலை பெற்றிருந்தாலும், அம்மாநில முதலமைச்சரான மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவிகிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Congratulations to the Chief Minister of West Bengal, @MamataOfficial Didi on her party’s victory in West Bengal assembly elections. My best wishes to her for her next tenure.
— Rajnath Singh (@rajnathsingh) May 2, 2021
மேற்கு வங்க தேர்தல் முடிவு 2021:
> திருணாமூல் காங்கிரஸ் 205 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. சுமார் 80 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
> முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது நந்திகிராமில் பாஜக வேட்பாளரரை விட முன்னிலையில்;
உள்ளார்.
> எதிர்க்கட்சித் தலைவர்கள் மம்தா பானர்ஜியை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
> வடக்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை.
> இன்னும் எண்ணற்ற பல சுற்றுகள் எஞ்சியுள்ளன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR