CBSE முக்கிய அறிவிப்பு.. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்!

CBSE Changed Examination Format: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 5, 2024, 09:24 AM IST
  • 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்
  • 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை
  • திறன் சார்ந்த கேள்விகளின் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும்.
CBSE முக்கிய அறிவிப்பு.. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்! title=

CBSE Latest Updates: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் இருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முறையில் திறன் சார்ந்த கேள்விகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ (CBSE) அறிவித்துள்ளது 

புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்

புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இன் நோக்கங்களுக்கு ஏற்ப, நிஜ வாழ்க்கை சூழ்நிலை கருத்துகளின் அடிப்படையில் அறிவைப் பயன்படுத்துவதற்கான கேள்விகள் இடம் பெறும். இதன்மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

9, 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தாலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் எந்த மாற்றமும் இருக்காது என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தி உள்ளது. அதே நேரத்தில் வெவ்வேறு கிரேடு நிலைகளில் நிலைத்தன்மையை பராமரிக்கிறது.

11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்

அதாவது இனி இந்தாண்டு முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில், "பாடத்திட்ட அடிப்படையிலான கேள்விகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வினா கேள்விகள் போன்ற திறன் சார்ந்த கேள்விகளின் சதவீதம் 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும். மறுபுறம் இதற்கு மாறாக, குறுகிய மற்றும் நீண்ட கேள்விகளின் சதவீதம் 40லிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - பிள்ளைகளுக்கு தேர்வு பயமா... பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆசிரியர்களின் அட்வைஸ்!

திறன் அடிப்படையிலான கல்வி அவசியம்

இதுக்குறித்து சிபிஎஸ்இ கல்வி இயக்குனர் ஜோசப் இமானுவேல் கூறுகையில், "புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இன் நோக்கங்களின் அடிப்படையில் சீரமைப்பை மேற்கொள்ள, திறன் அடிப்படையிலான கல்வியை (CBE) பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான சிபிஎஸ்இ வாரியத்தின் முக்கிய நடவடிக்கையே இந்த மாற்றம்" என்பதை உறுதிப்படுத்தினார். 

21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு ஏற்ப கல்விமுறை

மேலும் அவர் கூறுகையில், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்களின் ஆக்கப்பூர்வமான, விமர்சன மற்றும் அமைப்புமுறை சிந்தனைத் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் கற்றலை நோக்கிச் செல்லும் கல்விச் சூழலை உருவாக்குவதே சிபிஎஸ்இ வாரியத்தின் முக்கிய உந்துதலாக இருந்தது என்றார்.

மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன்களை வளர்ப்பதே சிபிஎஸ்இ-ன் நோக்கம்

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளை சீரமைப்பதில் சிபிஎஸ்இ இன் அர்ப்பணிப்பை இம்மானுவேல் மீண்டும் வலியுறுத்தினார். தேர்வுக் கட்டமைப்பை மாற்றியமைப்பதன் மூலம், மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன்களை வளர்ப்பதையும், 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு அவர்களைத் தயார்படுத்துவதையும் சிபிஎஸ்இ நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க - உங்கள் குழந்தைகளின் கணிதத் திறனை எவ்வாறு மேம்படுத்துவது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News