H1 B விசாவைப் புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர்

Big Announcemnt On H1 B visa: அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள், எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாடுகளுக்கு செல்ல அவசியமில்லாத வகையில், நாட்டிற்குள்ளேயே புதுப்பிக்கத்தக்க எச்-1பி விசாக்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா முடிவு

Last Updated : Jun 24, 2023, 01:17 PM IST
  • ஹெச்.ஒன்.பி விசா புதுப்பிப்பு அப்டேட்ஸ்
  • அமெரிக்காவிலேயே ஹெச்.ஒன்.பி விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம்
  • நாட்டிற்குள்ளேயே புதுப்பிக்கத்தக்க எச்-1பி விசாக்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா முடிவு
H1 B விசாவைப் புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டாம்! இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரதமர் title=

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தில் எட்டப்பட்ட பல முடிவுகளில், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முக்கியமான செய்தி, அமெரிக்காவில் பணிபுரிபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.  

வாஷிங்டன் டிசியில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். தொழில்துறை வல்லுநர்களுக்கு நிம்மதி தரும் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.

அமெரிக்காவில் வேலை செய்ய வந்திருக்கும் தொழிற்துறை பணியாளர்கள், இனிமேல் பணி விசாவைப் புதுப்பிக்க வெளிநாடு செல்ல வேண்டியதில்லை. பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்காவின் புதிய தூதரகங்கள் திறக்கப்படும். எச்1பி விசாக்களை அமெரிக்காவிலேயே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

வாஷிங்டன் டிசியில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் இந்திய புலம்பெயர்ந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பலத்த கரகோஷங்கள் எழுந்தன. பிரதமர் மோடி,அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்ட முடிவுகளில் இந்தியப் பணியாளர்களான மிகப் பெரிய முடிவு இதுவாகும்.   

மேலும் படிக்க | ஜோ பிடனின் தாத்தா சொன்ன அட்வைஸ்! வெள்ளை மாளிகை விருந்தில் சிரித்த பிரதமர் மோடி

அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்களுக்கு எச்-1பி விசா புதுப்பித்தல் செயல்முறையை சீராக்க, மக்களுக்கான முயற்சியின் ஒரு பகுதியாக, 'நாட்டிற்குள்ளேயே' புதுப்பிக்கத்தக்க எச்-1பி விசாக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

சியாட்டிலில் புதிய தூதரகத்தை திறக்கும் இந்தியா 
இந்தியா இந்த ஆண்டு சியாட்டிலில் புதிய தூதரகத்தை திறக்க உள்ளது. இது தவிர, அமெரிக்காவின் மேலும் 2 நகரங்களில் இந்திய துணை தூதரகங்கள் திறக்கப்படும். "நாங்கள் ஒன்றாக கொள்கைகள் மற்றும் ஒப்பந்தங்களை உருவாக்கவில்லை, நாங்கள் வாழ்க்கை, கனவுகள் மற்றும் விதிகளை வடிவமைக்கிறோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் சில மனு அடிப்படையிலான தற்காலிக வேலை விசாக்களின் உள்நாட்டு புதுப்பிப்புகளை தீர்ப்பதற்கு ஒரு பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பை இரு நாடுகளும் வரவேற்றதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

"இந்த ஆண்டின் பிற்பகுதியில், இந்திய குடிமக்கள் உட்பட, சில மனு அடிப்படையிலான தற்காலிக வேலை விசாக்களின் உள்நாட்டு புதுப்பிப்புகளை தீர்ப்பதற்கு ஒரு பைலட்டைத் தொடங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிவிப்பை தலைவர்கள் வரவேற்றனர். 2024 இல் எச்1பி மற்றும் எல் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் பிற தகுதியான பிரிவுகளைச் சேர்க்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்துகிறோம்" என்று இந்தியா-அமெரிக்க கூட்டு அறிக்கை கூறியது.

விசா விண்ணப்பங்களின் செயலாக்கத்தை அதிகரிக்க எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளை ஒப்புக்கொண்ட தலைவர்கள்,  கூட்டறிக்கையில், "இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொழில் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், வணிகம், சுற்றுலா மற்றும் பயணத்தை எளிதாக்குவதற்கான கூடுதல் வழிமுறைகளை அடையாளம் காணவும் தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்."

மேலும் படிக்க | ஜோ பிடனின் தாத்தா சொன்ன அட்வைஸ்! வெள்ளை மாளிகை விருந்தில் சிரித்த பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News