பெங்களூருவை சேர்ந்த வாலிபர் டேட்டிங் இணையதளம் மூலம் சந்தித்த பெண்ணிடம் ரூ.60 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
பெங்களூருவை சேர்ந்த 34-வயது வாலிபர் ஒருவர், இணையத்தில் shompa76 என்னும் ID-ல் தொடர்புக்கொண்ட முகம் தெரியாத பெண்ணிடம் நட்பு பாராட்டியுள்ளார். பின்னர் WhatsApp மூலம் நட்பினை வளர்த்துள்ளனர்.
பின்னர் சந்தப்பட்ட பெண் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக கூறி ரூ.30000 கேட்டுள்ளார்., மறுப்பு இன்றி தானும் வழங்கியுள்ளார் அந்த வாலிபர். பின்னர் அடுத்தடுத்து கேட்க கடந்தாண்டு டிச., 15 துவங்கி ஜன., 23, 2018 வரையிலும் சுமார் 60 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் அந்த மர்ம பெண்.
பின்னர் தன்னுடன் தொடர்பு கொள்வதை shompa76 நிறுத்தியவுடன், இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட பெண்னை தேடி வருகின்றனர். எனினும் இதுவரை இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர் பெயர் அப்ரிதா என கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவரை பற்றிய மற்ற விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவர்கள் இருவரும் திருமணப் பதிவு இணையத்தில் அறிமுகமாகியுள்ளனர், தற்போது இவ்வாறு செயல்கள் திருமணப் பதிவு இணையங்களில் நிகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.